பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளிகளில் 'தினமலர்' வினாடி - வினா; ஏழு பள்ளிகளில் காலிறுதிச் சுற்று

Added : ஜன 11, 2020
Advertisement
 பள்ளிகளில் 'தினமலர்' வினாடி - வினா; ஏழு பள்ளிகளில் காலிறுதிச் சுற்று

கோவை:தினமலர், கோவை அமிர்தாவிஸ்வ வித்யாபீடம் கல்வி நிறுவனம் மற்றும் எஸ்.எஸ்.வி.எம்.,கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும், மெகா வினாடி - வினா போட்டிக்கான காலிறுதிச்சுற்று, கோவை பள்ளிகளில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.நேற்று கைக்கோளபாளையத்தில் உள்ள 'ரீட்ஸ் வேர்ல்டு ஸ்கூலில்' நடந்த, தகுதிச்சுற்றுக்கான பொது அறிவுத்தேர்வு போட்டியில், 100 மாணவர்கள் தேர்வு எழுதினர். அதில், தேர்வு செய்யப்பட்ட 16 பேர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டனர். தொடர்ந்து, காலிறுதி சுற்றுக்கான வினாடி வினா போட்டி நடந்தது.இதில், 'இ' அணியைச் சேர்ந்த அனிருத்பொன்ராஜ், ராகுல் ஆகியோர் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினர். வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளியின் நிர்வாகி ராஜாமணியன் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார்.வெற்றி பெற்றவர்களை, பள்ளியின் முதல்வர் அனுராதா பாராட்டினார். ஆசிரியைகள் திவ்யா, சிவலட்சுமி, கீதா, மஹாரிஷி, கோமதி ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.ஏ.ஆர்.சி.,பள்ளிகருமத்தம்பட்டியில் உள்ள ஏ.ஆர்.சி.,மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த போட்டயில் 400 மாணவர்கள் பங்கேற்றனர். 'ஹெச்' அணியைச் சேர்ந்த லலித், இனியபாரதி ஆகியோர் வெற்றி பெற்றனர். பள்ளியின் முதல்வர், காந்திமணி பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியினை, ஆசிரியர்கள் டேனியல், பூங்கொடி, ஜென்சி, ஜோதிலட்சுமி ஒருங்கிணைத்தனர்.சி.ஆர்.ஆர்.,மெட்ரிக் பள்ளிஒண்டிப்புதுாரில் உள்ள சி.ஆர்.ஆர்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த போட்டியில், 600 மாணவர்கள் பங்கேற்றனர். இறுதியில், 'எப்' அணியைச் சேர்ந்த அரவிந், ரஞ்சித்குமார் ஆகியோர் வெற்றி பெற்றனர். பள்ளியின் முதல்வர் ஜெய்சாந்தா மற்றும் துணை முதல்வர் சிவகாமி ஆகியோர் பரிசுகளை வழங்கினர். ஆசிரியர்கள் சிவக்குமார், தேவகி, பத்மாவதி, ட்ரீசா ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.காந்தியடிகள் பள்ளிஇடையர்பாளையத்தில் உள்ள, காந்தியடிகள் கல்வி நிறுவனம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த போட்டியை, பள்ளியின் நிர்வாகத்தலைவர் சுப்பிரமணியம், தாளாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் துவக்கி வைத்தனர். 500 மாணவர் பங்கேற்ற இப்போட்டியில், 'ஹெச்' அணியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த், தர்னீஷ் வெற்றி பெற்றனர். பள்ளியின் நிர்வாகச் செயலர் உஷா, முதல்வர் தியாகராஜன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். நிகழ்ச்சியினை, ஆசிரியைகள் நந்தினி, சசிகலா, தீபா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.எம்.ஜி.எம்.,மெட்ரிக் பள்ளிகே.என்.ஜி.,புதுாரில் உள்ள எம்.ஜி.எம்.,மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த போட்டியில், 150 மாணவர்கள் பங்கேற்றனர். இறுதியில், 'ஹெச்' அணியைச் சேர்ந்த, சுமிதா, ஆஷிகாஸ்ரீ ஆகியோர் வெற்றி பெற்றனர். பள்ளியின் முதல்வர் உஷா பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியை ஆசிரியைகள் பானு, லாவண்யா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.ராமகிருஷ்ண மிஷன் பள்ளிபெ.நா.பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளியில் (ஆங்கிலவழி) நடந்த போட்டியில், 520 மாணவர்கள் பங்கேற்றனர். 'ஏ' அணியைச் சேர்ந்த ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரம், வேல்முருகன் வெற்றி பெற்றனர். பள்ளியின் பொறுப்பு ஆசிரியை சுமதி பரிசு வழங்கினார். நிகழ்ச்சியை ஆசிரியைகள் பிரியதர்ஷினி, மகேஸ்வரி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளிவட்டமலைபாளையத்தில் உள்ள, ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த போட்டியில், 400 மாணவர்கள் பங்கேற்றனர். இறுதியாக, 'ஹெச்' அணியைச் சேர்ந்த மோகனேஸ்வரி, அனுகிரஹா ஆகியோர் வெற்றி பெற்றனர். பள்ளியின் முதல்வர் சாரதா பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியை ஆசிரியர்கள் சரண்குமார், சித்ரா, தினேஷ் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X