இந்தியா

மதுபாட்டில் கடத்திய இரு வாலிபர்கள் கைது

Added : ஜன 11, 2020
Advertisement

காரைக்கால்:காரைக்காலில் இருந்து தமிழக பகுதிக்கு பைக்கில் மது பாட்டில் கடத்திய இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

திருப்பட்டினம் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு கீழவாஞ்சூர் பகுதியில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது மூட்டை ஏற்றிக் கொண்டு வேகமாக வந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், காரைக்காலில் இருந்து தமிழக பகுதிக்கு மதுபாட்டில்கள் கடத்திச் செல்வது தெரிய வந்தது.அதனைத் தொடர்ந்து, பைக்கில் வந்த இருவரையும் பிடித்து விசாரித்தனர்.

அதில், அவர்கள் நாகை மாவட்டம் வௌிப்பாளையத்தை சேர்ந்த சிவா,23; விக்னேஷ்,25; என்பது தெரிய வந்தது.அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து, இருவரையும் கைது செய்தனர். மேலும், அவர்கள் கடத்தி சென்ற மதுபாட்டிலையும், கடத்தலுக்கு பயன்படுத்திய பைக்கையும் பறிமுதல் செய்து, கலால் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X