பொது செய்தி

தமிழ்நாடு

ஒன்றல்ல...இரண்டல்ல... ஹெல்மெட் அணியாமல் அபராதம் 'அழுதவர்கள்'

Added : ஜன 11, 2020
Share
Advertisement

கோவை:ஓராண்டில், 'ஹெல்மெட்' அணியாமல் சென்ற, 2.31 லட்சம் பேருக்கு போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக, கோவையில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. போக்குவரத்து விதிகளை மதிக்காததால், விபத்துக்களும் இங்கு அதிகமாக நடக்கின்றன.'ஹெல்மெட்' அணியாததால் பைக் ஓட்டியவர்கள், பின்னால் அமர்ந்து சென்றோர் அதிகளவு உயிரிழக்கின்றனர். ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க நீதிமன்றமும் உத்தரவிட்டது. இதையடுத்து ஹெல்மெட் அணியாமல், வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது.கடந்த ஓராண்டில், கோவை மாநகரில், ஹெல்மெட் அணியாமல், வாகனம் ஓட்டிய இரண்டு லட்சத்து, 31 ஆயிரத்து, 327 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் முத்தரசு கூறுகையில்,''ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் குறித்து, சிக்னல்களில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் மூலம் கண்காணித்து, ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அனைத்து அபராதங்களுக்கும், இ-சலான் நடைமுறை பின்பற்றப்படுகிறது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X