பொது செய்தி

தமிழ்நாடு

மனைவியை எப்படி நடத்த வேண்டும்?

Added : ஜன 11, 2020
Advertisement
 மனைவியை எப்படி நடத்த வேண்டும்?

இ ந்தியாவில் வாய்மொழியாக கதை சொல்லி, செவி வழியாக கேட்கும் மரபுதான் பழங்காலத்தில் இருந்தது. பிற்காலத்தில் அவை எழுத்து வடிவம் பெற்ற பிறகு தெருக்கூத்து, நாடகம் போன்ற கலைகளாக வடிவம் பெற்றன.இப்படி, மக்கள் வழக்கில் தோன்றிய பல ஆயிரம் தொல் கதைகள் உள்ளன. இதில் ஒரு கதையை தழுவி, கன்னட எழுத்தாளர் கிரிஷ் கர்னாட், 'நாகமண்டலம்' என்ற நாடகத்தை எழுதினார். புகழ் பெற்ற இந்நாடகம், கன்னடம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் அரங்கேற்றம் செய்யப்பட்டுள்ளது. குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரி மாணவர்கள், முதல் முறையாக தமிழில் இந்நாடகத்தை அரங்கேற்றி, பார்வையாளர்களை பிரமிப்பின் வேறு தளத்துக்கு அழைத்துச் சென்றனர்.கதை இதுதான்!இரவில் வீடுகளில் எரியும் விளக்குகள் எல்லாம் அணைந்த பிறகு, எல்லோரும் ஒரு கோவில் மரத்தடியில் கூடி, வீடுகளில் நடந்த விஷயங்களை கதைகளாக பேசுவது வழக்கம். அதில் ஒரு விளக்கு சொன்ன கதைதான் நாகமண்டலம்!அப்பண்ணா ஒரு விவசாயி. அவனுக்கும், ராணி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடக்கிறது. அப்பண்ணா, முன் கோபக்காரன். யாரையும் மதிக்காத முரட்டு குணம் கொண்டவன். கல்யாணம் ஆன நாளில் இருந்து, அவன் தன் மனைவியை மகிழ்ச்சியாக வைத்திருக்கவில்லை. வீட்டுக்குள் பூட்டி வைத்து தனிமைப்படுத்துகிறான். ராணி, கணவனின் அன்புக்காக ஏங்குகிறாள்.அப்போது அப்பண்ணாவின் அத்தை, ராணியை சந்தித்து, ஆண்களின் மனதை வசியம் செய்யும் வேர் ஒன்றை கொடுத்து, பாலில் கலந்து கொடுக்க சொல்கிறாள். அதை ராணி பாலில் கலக்கும் போது, பால் திரிந்து விடுகிறது.அதை கணவனுக்கு தெரியாமல் வீட்டுக்கு பின்புறம் இருந்த புதரில் ஊற்றுகிறாள். அது கருநாகம் குடியிருக்கும் புற்று என, ராணிக்கு தெரியாது. புற்றில் இருந்த பாம்பு, அந்த பாலை குடித்து விடுகிறது.ஒருநாள் இரவு, புற்றில் இருந்த கருநாகம் ராணியின் வீட்டுக்குள் நுழைகிறது. பாம்பை பார்த்த ராணி அலறுகிறாள். பாம்பு வெளியே போய் விடுகிறது. வெளியில் சென்ற பாம்பும், அப்படி அச்சு அசலாக அப்பண்ணாவை போல், மனித உருவம் எடுத்து, வீட்டின் கதவை தட்டுகிறது.கதவை திறந்த ராணி, வந்திருப்பது கணவன் என, கட்டித் தழுவி அழுகிறாள். அன்றிலிருந்து ராணியின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.அப்பண்ணாவாக மாறி இருக்கும் நாகம், அவளை பிரியாமல் அன்பு காட்டுகிறது. அப்பண்ணா உருவத்தில் இருப்பது நாகா என்ற நாகப்பாம்பு என்பது ராணிக்கு தெரியாது.ஒரு கட்டத்தில், இதை அறியும் கணவன் அப்பண்ணா, தவறை திருத்திக் கொண்டு வாழ்நாள் முழுக்க மனைவியை அன்பாக வைத்துக் கொள்கிறான்.அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகளை, அழகாக காட்சிகளாக அரங்கேற்றிய மாணவர்கள், கைத்தட்டல்களை அள்ளினர்!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X