பொது செய்தி

தமிழ்நாடு

பாலம் கட்டும் திட்டம் ரத்து

Added : ஜன 11, 2020
Advertisement

கோவை:கோவை, லாலி ரோடு - தடாகம் ரோடு சந்திப்பில் மட்டும் மேம்பாலம் கட்டப்படுகிறது; மருதமலை ரோடு - கவுலிபிரவுன் ரோடு இணைக்கும் பாலம் திட்டம் கைவிடப்படுகிறது.காந்தி பார்க்கில் இருந்து தடாகம், கணுவாய், ஆனைகட்டி செல்லும் தடாகம் சாலையில், லாலி ரோடு சிக்னல் பகுதியில் காலை, மாலை வேளைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. லாலி ரோடு சந்திப்பில் போக்குவரத்தை குறைக்க, தடாகத்தில் இருந்து கோவை நோக்கி வரும் வாகனங்களை, அரசு தொழில்நுட்ப கல்லுாரிக்கு எதிரே உள்ள பாரதி பார்க் ரோடு வழியே திருப்பி விடலாம்.வடவள்ளி செல்லும் இருசக்கர மற்றும் இலகுரக வாகனங்களை, லாலி ரோடு சிக்னலுக்கு முன்பாக உள்ள குறுக்கு ரோடு வழியாக திருப்பி விட்டால், சிக்னல் பகுதியில் போக்குவரத்து குறைய வாய்ப்புள்ளது.இருப்பினும், லாலி ரோடு சந்திப்பில் மேம்பாலம் கட்டுவதற்கு மாநில நெடுஞ்சாலைத்துறை முன்வந்தது. இரு வழித்தடத்திலும் எவ்வளவு வாகனங்கள் செல்கின்றன என கணக்கெடுத்து, பாலம் கட்ட திட்டமிட்டது.இதற்கு, கலெக்டர் தலைமையிலான சாலை பாதுகாப்பு குழு கூட்டத்தில், ஒப்புதல் பெறப்பட்டது. இச்சூழலில், மருதமலை ரோட்டில் இருந்து கவுலி பிரவுன் ரோட்டை இணைக்கும் வகையில், நான்கு வழி பாலமாக கட்ட, போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தினர்.நான்கு வழித்தடமாக பாலம் கட்டுவதற்கு போதிய இடம் இல்லாததால், நிலம் கையகப்படுத்த வேண்டியிருக்கிறது. இதற்கு, மாநில நெடுஞ்சாலைத்துறை தயாராக இல்லை. அதனால், கவுலி பிரவுன் ரோடு - மருதமலை ரோடு இணைக்க, பாலம் கட்டும் திட்டத்தை கைவிட்டு, லாலி ரோடு - தடாகம் ரோட்டுக்கு மட்டும் கட்ட, முடிவு செய்திருக்கிறது.மாநில நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், 'வாகன கணக்கெடுப்பு நடத்தியதில், லாலி ரோட்டில் இருந்து, காந்தி பார்க் நோக்கி செல்வோரே அதிகமாக இருந்தனர். விசேஷ காலங்களில் மட்டுமே மருதமலை ரோட்டில், அதிக வாகனங்கள் செல்கின்றன. லாலி ரோட்டில் பயணிப்போரை மேம்பாலத்தில் அனுப்பினால், ரோட்டில் போக்குவரத்து குறையும். மருதமலை ரோட்டில் செல்வோருக்கு இடையூறு ஏற்படாது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X