ஜிப்மர் கேந்திரிய வித்யாலயாவில் நானோ தொழில் நுட்ப கருத்தரங்கு| Dinamalar

இந்தியா

ஜிப்மர் கேந்திரிய வித்யாலயாவில் நானோ தொழில் நுட்ப கருத்தரங்கு

Added : ஜன 11, 2020
 ஜிப்மர் கேந்திரிய வித்யாலயாவில் நானோ தொழில் நுட்ப கருத்தரங்கு

புதுச்சேரி:புதுச்சேரி ஜிப்மர் கேந்திரிய வித்யாலயா பள்ளி, கர்நாடகா அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி கழகம் இணைந்து, நானோ தொழில்நுட்பம் குறித்து ஒரு நாள் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி ஜிப்மர் சமூக நலக்கூடத்தில் நடந்தது.

புதுச்சேரியை சேர்ந்த 10 பள்ளிகளில் இருந்து 200 மாணவ மாணவிகள் பங்கு பெற்றனர். பெங்களூர் சி.என்.எஸ். விஞ்ஞானி கிருஷ்ணபிரசாத், அங்கப்பன், புதுச்சேரி பல்கலைக்கழக பேராசிரியர் ரமேஷ்பாபு காங்கினேனி ஆகியோர் நானோ தொழில்நுட்பம் குறித்து மாணவர்களுக்கு விளக்கினர்.

ஜிப்மர் தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் அசோக் சங்கர்படே, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.புதுச்சேரி கேந்திர வித்யாலயா பள்ளி முதல்வர் ஜோஸ் மேத்யூ மற்றும் ஆசிரியர் முருகவேல் வாழ்த்துரை வழங்கினர்.நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X