லைப் அண்டு ஸ்டைல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

லைப் அண்டு ஸ்டைல்

Added : ஜன 11, 2020
Share

கொடிசியாவில் விருந்து!காதுக்கு இனிய இசையும், நாக்கு நல்ல சுவையும் வேண்டுமா? விடுங்க வண்டிய நேரா கொடிசியாவுக்கு. கோவை திருவிழாவின் ஒரு பகுதியாக, கோவை ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் சார்பில், மிகப் பெரிய உணவு திருவிழா கொடிசியா திறந்த வெளி மைதானத்தில் இன்று மாலை 5:00 மணிக்கு நடக்கிறது. பிரபல சினிமா பின்னணி பாடகர்கள் பங்கேற்கும் இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது. ஜமாப், பறையாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற கலைநிகழ்ச்சியும் காணலாம்.உணவு திருவிழாவில், கொங்கு நாட்டின் பிரத்தியேகமான உணவு வகைகள், தென்னிந்திய மற்றும் வட நாட்டு உணவு வகைகள், சைனீஸ் மற்றும் மேற்கத்திய உணவுகள் என, வித விதமாக, 140 ஐட்டங்களுக்கு மேல் இடம் பெறுகின்றன.நுழைவு கட்டணம், 120 ரூபாய். நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை.தன்னார்வலர்களுக்கு விருதுகோவை விழாவின் ஒரு பகுதியாக, நீர் நிலைகளை துார்வாரி, பேணி காத்து பருவமழையின் போது, அவற்றில் போதுமான அளவு நீர் தேங்க காரணமாக இருந்த, கோவையில் உள்ள தன்னார்வலர்கள், இன்று கவுரவிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு விருது வழங்கும் விழா, 'மாமழை போற்றுதும்' என்ற பெயரில், புரூக்பாண்ட் ரோடு, கிக்கானி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள, சரோஜினி நடராஜ் கலையரங்கில், இன்று மாலை, 5:00 மணிக்கு நடக்கிறது. பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், சர்வ பிரார்த்தனையும் இடம் பெறுகின்றன.சொல்லில் சுழலும் கவிதைபி.எஸ்.ஜி., அறநிலையத்தின், பி.எஸ்.ஜி., வானவில் அமைப்பு சார்பில், சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இன்று, 'சொல்லில் சுழலும் கவிதை' என்ற தலைப்பில், சிவகாசியை சேர்ந்த பேராசிரியர் கணேசன் சொற்பொழிவாற்றுகிறார். இந்நிகழ்ச்சி, அவிநாசி ரோடு, பீளமேட்டில் உள்ள, பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரியில், இன்று மாலை, 6:00 மணிக்கு துவங்குகிறது. முன்னதாக, பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி மாணவர்களின் இசை நிகழ்ச்சி, மாலை, 5:30 முதல் 6:00 மணி வரை நடக்கிறது.நாட்டுப்புற கலைவிழாபொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரியில் உள்ள கற்பகம் பல்கலை வளாகத்தில், நாட்டுப்புற கலை விழா, இன்று நடக்கிறது. பல்கலையில், பொங்கல் விழா கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக நடக்கும் இவ்விழா, இன்று காலை, 9:00 மணிக்கு துவங்குகிறது. மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள் சார்பில், பொங்கல் வைக்கப்படுகிறது. தமிழ் பண்பாட்டு விழாவாக, நமது பாரம்பரியம் மிக்க விளையாட்டுகள், ஆடல், பாடல்கள், வாத்தியங்கள் இசைக்கப்படுகின்றன.கல்லுாரிகளில் பொங்கல் விழாகோவையில் தங்கி கல்லுாரிகளில் பயிலும் பிற மாவட்டங்கள், வெளியூர்களை சேர்ந்த மாணவ, மாணவியரின் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாட வசதியாக, பெரும்பாலான கல்லுாரிகளில், தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், மாணவ, மாணவியர் தாங்கள் பயிலும் கல்லுாரியிலும் பொங்கல் பண்டிகையை கொண்டாடி விட்டு சொந்த ஊருக்கு செல்லும் முனைப்புடன், இன்று கல்லுாரிகளில் பொங்கல் வைத்தும், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை நடத்தியும் அசத்தவுள்ளனர். இந்நிகழ்வு, இன்று காலை, 9:30 மணி முதல் நடக்கவுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X