இந்தியா

சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம் பக்தர்கள் திரளாக பங்கேற்பு

Added : ஜன 11, 2020
Advertisement

புதுச்சேரி:புதுச்சேரியில் பல்வேறு கோவில்களில் ஆருத்ரா தரிசனம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
புதுச்சேரி காந்தி வீதியில் அமைந்துள்ள வேதபுரீஸ்வரர் கோவிலில், சிவகாமசுந்தரி அம்பாள் சமேத நடராஜ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், மாலை சிறப்பு அலங்காரத்தில் தரிசன வைபவமும் நடந்தது. ஆருத்ரா தரிசனத்தையொட்டி, நேற்று காலை முதல் பக்தர்கள் அதிக அளவில் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தனர்.

லாஸ்பேட்டை: சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி, நேற்று காலை 5:00 மணிக்கு, சிவகாம சுந்தரி சமேத நடராஜர் மற்றும் மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, சோடசோப தீபாராதனை, மாணிக்கவாசகரின் திருவாசகத்தில் இருந்து திருவெம்பாவை விண்ணப்பம் செய்தல், கோவில் பிரகார உலா நடந்தது.மாலை சிவகாம சுந்தரி சமேத நடராஜருக்கு சிறப்பு அலங்காரம், சோடசோப தீபாராதனையை தொடர்ந்து இரவு 7:00 மணிக்கு ஆருத்ரா தரிசனமும், தொடர்ந்து சுவாமி வீதியுலாவும் நடந்தது.

நந்திகேஸ்வரர் கோவில்: புதுச்சேரி வெள்ளாழர் வீதியில் உள்ள நந்திகேஸ்வரர் கோவிலில், 125 ஆண்டுகளுக்கு பின், மார்கழி ஆருத்ரா பெருவிழா நேற்று நடந்தது. காலை 5:30 மணிக்கு ஆருத்ரா அபிேஷகம், தரிசனம் ஆகியவற்றை தொடர்ந்து, நந்திகேஸ்வரர் வீதியுலா நடந்தது. மாலை 6:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, ஆருத்ரா தரிசனமும், தொடர்ந்து பவுர்ணமி அர்ச்சனை நடந்தது.

அதேபோன்று, வில்லியனுார், திருக்காஞ்சி, பாகூர் உள்ளிட்ட அனைத்து சிவாலயங்களிலும் ஆருத்ரா தரிசனம் நேற்று விமர்சையாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X