பொது செய்தி

தமிழ்நாடு

'மெகா உணவு திருவிழா' துவக்கம்! ஒரே இடத்தில் 3 ஆயிரம் வகை உணவு ருசிக்கலாம்

Added : ஜன 11, 2020
Advertisement
 'மெகா உணவு திருவிழா' துவக்கம்! ஒரே இடத்தில் 3 ஆயிரம் வகை உணவு ருசிக்கலாம்

கோவை விழாவை முன்னிட்டு, கொடிசியா அருகில் மெகா உணவு திருவிழா நேற்று துவங்கியது; ஒரே இடத்தில், 3 ஆயிரம் வகையான உணவை மக்கள் ருசித்து, கொண்டாடி மகிழ்ந்தனர்.கோவை விழா - 2020ன் ஒரு பகுதியாக, ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் சார்பில், மெகா உணவு திருவிழா, கொடிசியா ரோட்டிலுள்ள திறந்தவெளி மைதானத்தில், நேற்று மாலை துவங்கியது. அமைச்சர் வேலுமணி, மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார், உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தமிழ்செல்வன், ஆகியோர் துவக்கி வைத்தனர்.நேற்று துவங்கிய உணவு திருவிழா, நாளை இரவு வரை நடக்கிறது. பிரபல உணவு தயாரிப்பாளர்கள், 150க்கும் மேற்பட்ட ஸ்டால்களை அமைத்துள்ளனர். 3,000க்கும் அதிகமாக உணவு வகைகள் இடம் பெற்றுள்ளன. நுழைவு கட்டணம், 120 ரூபாய்; 12 வயதுள்ள குழந்தைகளுக்கு அனுமதி இலவசம்.அந்தந்த ஸ்டால்களில், பட்ஜெட்டுக்கு ஏற்ப உணவு வகைகளை உண்டு, இசை கச்சேரியை ரசித்து மகிழலாம். முதல்நாளான நேற்று, இசை கலைஞர் ஸ்டீபன் தேவசி குழுவின் கச்சேரி நடந்தது.உணவு திருவிழா தலைவர் பாலசந்தர், கோவை ஓட்டல்கள் சங்க செயலர் சிவகுமார் கூறுகையில், 'உணவு வகைகள் மட்டுமின்றி நொறுக்கு தீனி வகைகள், மில்க் ேஷக், ஐஸ்கிரீம் போன்ற அனைத்தும் இடம்பெற்றுள்ளன. 150க்கும் மேற்பட்ட ஸ்டால்களில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணவு வகைகள் இடம் பெற்றுள்ளன' என்றனர்.துவக்க நிகழ்ச்சியை முன்னிட்டு, கோவை ஓட்டல்கள் சங்கம் சார்பில், ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவச உணவு டோக்கன்கள் வழங்கப்பட்டன.மில்கி மிஸ்ட் நிர்வாக இயக்குனர் சதீஷ்குமார், ஜென்னி குழுமம் அடைக்கல ராஜ், பார்க் கல்வி நிறுவன முதன்மை அதிகாரி அனுஷா ரவி, கோவை ஓட்டல்கள் சங்க தலைவர் ஸ்ரீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X