இந்தியா

ஆதியோகி ரத யாத்திரைக்கு புதுச்சேரியில் வரவேற்பு

Added : ஜன 11, 2020
Advertisement
 ஆதியோகி ரத யாத்திரைக்கு புதுச்சேரியில் வரவேற்பு

புதுச்சேரி:புதுச்சேரி வந்த ஆதியோகி ரத யாத்திரைக்கு ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோயம்பத்துார் வெள்ளியங்கிரி அடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா மையத்தில் பிப்., 21ம் தேதி, மகா சிவராத்திரி விழா நடக்கிறது. இதில் பங்கேற்க பொதுமக்களை அழைக்கும் விதமாக, ஜக்கி வாசுதேவால் பிரதிஷ்டை செய்யப்படுள்ள 112 அடி ஆதி யோகி சிவன் சிலையின் சிறிய வடிவம் கொண்ட ஆதி யோகி ரத யாத்திரை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 1ம் தேதி கோவையில் துவங்கிய யாத்திரை நேற்று புதுச்சேரி வந்தது. சித்தானந்தா சுவாமி கோவில் அருகே வையாபுரி மணிகண்டன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. நேற்று லாஸ்பேட்டை ,முத்தியால் பேட்டை , அண்ணா சாலை , மறைமலை அடிகள் சாலை , கோரிமேடு, மேட்டுப்பாளையம், ரெட்டியார்பாளையம் வரையிலும், இன்று (11ம் தேதி) , முதலியார்பேட்டை, அரியாங்குப்பம், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், பாகூர் வரையும். 12 மற்றும் 13ம் தேதிகளில் வில்லியனூர், திருபுவனை, சேதராப்பட்டு, திருக்கனூர் பகுதிகளில் ரத யாத்திரை நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X