இந்தியா

டெங்கு காய்ச்சலுக்கு 9ம் வகுப்பு மாணவி பலி

Added : ஜன 11, 2020
Advertisement

புதுச்சேரி:புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 9ம் வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

புதுச்சேரி, முத்தியால்பேட்டை கணேஷ் நகர், 5வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் சொக்கநாதன். இவர், அங்குள்ள பாண்பேப் கூட்டுறவு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மகள் ரம்யா,15; முத்தியால்பேட்டை சின்னாத்தா அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.கடும் காய்ச்சலால் அவதிப்பட்ட ரம்யா, கடந்த 5ம் தேதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு நடத்திய பரிசோதனையில் ரம்யாவிற்கு டெங்கு இருப்பது கடந்த சில நாட்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மாணவி ரம்யா, நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.இதையெடுத்து, சுகாதாரத்துறையினர் ரம்யா வீட்டை சுற்றிலும் சுகாதார பணியில் ஈடுப்பட்டனர்.

டெங்கு பரவும் கொசுக்களை அழிக்கும் பணியை மேற்கொண்டனர். ரம்யாவின் தாய்க்கும் டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பதால், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலால் மாணவி இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X