பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்குவதில் குளறுபடி! அலைக்கழிக்கப்படுவதாக பெற்றோர் வேதனை

Added : ஜன 11, 2020
Advertisement

உடுமலை: உடுமலை, கல்வி மாவட்டத்தில், மாணவர்களுக்கு லேப்-டாப்கள் வழங்குவதில் தொடர்ந்து குளறுபடி ஏற்படுத்துவதால், அலைக்கழிக்கப்படுவதாக பெற்றோர் வேதனையடைந்துள்ளனர்.
உயர்கல்வியில், தொழில்நுட்ப வசதிக்காக, அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, இலவச லேப்-டாப் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இடைநிற்றல் இல்லாமல், மேல்நிலை வரை படிக்கும் சூழலுக்கும் இத்திட்டம் காரணமாக உள்ளது. பொருளாதார வசதியில்லாத பலருக்கும் இத்திட்டம் பயனுள்ளதாக உள்ளது.இத்தகைய திட்டம், 2017-18 ம் ஆண்டு முதல் நடப்பு கல்வியாண்டு வரை, தாமதமானதால், மேல்நிலை படிப்பை முடிக்கும் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். உடுமலை கல்வி மாவட்டத்தில், ஆண்டுதோறும், ஐந்தாயிரம் மாணவர்கள் மேல்நிலை படிப்பை முடித்து வெளியேறுகின்றனர். உடுமலை கல்வி மாவட்டத்திலும், 2017-18 ம் கல்வியாண்டு முதல், மாணவர்களுக்கு லேப்-டாப்கள் வழங்குவதில் குளறுபடி ஏற்பட்டது.
நடப்பு கல்வியாண்டு துவங்கியதும், பிளஸ் 1 மாணவர்களுக்கும் லேப்-டாப்கள் வழங்கப்பட்டதால், பிளஸ் 2 முடித்து சென்ற கடந்த கல்வியாண்டு மாணவர்கள், பள்ளிகளின் முன்பு போராட்டம் நடத்தினர்.தொடர்ந்து, ஒவ்வொரு கல்வியாண்டு மாணவர்களுக்கும், படிப்படியாக மாவட்ட கல்வித்துறையிலிருந்து, அந்தந்த பள்ளிகளுக்கு லேப்-டாப்கள் அனுப்பப்பட்டன.
மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, அவை வழங்கப்பட்டன. அதிலும், 2017-18 கல்வியாண்டு மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை. மற்ற மாவட்டங்களில், இதுவரை அனைத்து கல்வியாண்டு மாணவர்களுக்கும் வழங்கப்பட்டதால், இப்பகுதியில் பெற்றோர், அதிருப்தியடைந்து, நாள்தோறும் பள்ளிகளுக்குச்சென்று விசாரிக்கத்துவங்கினர்.இதனால், மற்ற கல்வியாண்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது போக மீதமுள்ள லேப்-டாப்களை, 2017-18 ம் ஆண்டு மாணவர்களுக்கு வழங்க, அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதன்படி, நேற்று முதல், மாணவர்களுக்கு அவை வினியோகிக்கப்பட்டு வருகிறது. ஆனால், ஒவ்வொரு பள்ளியிலும், அந்த கல்வியாண்டு மாணவர்களை விட குறைவான எண்ணிக்கையில் மட்டுமே லேப்-டாப்கள் இருக்கிறது. இதனால், முதலில் வரும் மாணவர்கள் அவற்றை பெற்றுச்சென்றனர்.மீதமுள்ள மாணவர்களும், பெற்றோரும் ஏமாற்றத்தோடு திரும்பினர்.
மாணவர்களுக்கு இவ்வாறு லேப்-டாப்கள் வழங்குவதில் தொடர்ந்து குளறுபடி ஏற்படுத்துவதால், பெற்றோர் அலைக்கழிக்கப்படுவதாக வேதனையடைந்துள்ளனர்.பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது.
தலைமையாசிரியர் ஒருவர் கூறுகையில், '' அனைத்து மாணவர்களுக்குமே லேப்-டாப்கள் கட்டாயம் வழங்கப்படும். தற்போது, எத்தனை மாணவர்களுக்கு தேவையாக உள்ளது என பட்டியல் கேட்கப்பட்டுள்ளது. பட்டியலும் அனுப்பப்பட்டுள்ளது. பிப்,, மாதத்திற்குள் மீதமுள்ள மாணவர்களுக்கும் லேப்-டாப்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கிறோம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X