இந்தியா

காரைக்காலில் வயல்வெளி விழா அமைச்சர் துவக்கி வைப்பு

Added : ஜன 11, 2020
Advertisement
 காரைக்காலில் வயல்வெளி விழா அமைச்சர் துவக்கி வைப்பு

காரைக்கால்:காரைக்காலில் இயற்கை முறையில் பாரம்பரிய நெல் ரக வயல் திருவிழாவை அமைச்சர் கமலகண்ணன் துவக்கி வைத்து பார்வையிட்டார்.

காரைக்கால் மாவட்ட வேளாண் துறை மற்றும் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை (ஆத்மா) இணைந்து வரிச்சிக்குடி கொன்னகாவலி பகுதியில் பாஸ்கர் என்ற விவசாயி அவரது வயலில் 110 வகையான பாரம்பரிய நெல் ரகங்கள் இயற்கை விவசாயம் மூலம் பயிரிட்டுள்ளார்.இங்கு வயல் வெளி திருவிழா நடந்தது.

கலெக்டர் விக்ரந்தராஜா, துணை கலெக்டர் ஆதாஷ் முன்னிலை வகித்தனர். வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் தலைமை தாங்கி, வயல்வெளி திருவிழாவை துவக்கி வைத்து, 110 ரக நெல்களை இயற்கை முறையில் பயிரிட் டுள்ள வயலை பார்வையிட்டு, விவசாயி பாஸ்கரை பாராட்டினார்.

தொடர்ந்து நடந்த பாரம்பரிய உணவு, பாரம்பரிய நாட்டு விதைகள். துணிப்பைகள். இயற்கைப் பருத்தி ஆடைகள் கண்காட்சியை பார்வையிட்டார்.வயல்வெளி திருவிழா வில் பங்கேற்ற விவசாயிகள் 110 ரகங்கள் பயிரிட்டுள்ள வயலை பார்வையிட்டு, நெல் ரகம், அதன் மருத்துவ குணம், அறுவடையாகும் காலம், பயிரிடும் முறை உள்ளிட்ட விபரங்களை கேட்டறிந்தனர். நிகழ்ச்சியில் கூடுதல் வேளாண் அதிகாரி செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X