பொது செய்தி

தமிழ்நாடு

மாநில நெடுஞ்சாலைக்கு நிதி ஒதுக்கீடு 2 கி.மீ., க்கு நான்கு வழித்தடம் அமையும்

Added : ஜன 11, 2020
Advertisement

உடுமலை:தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில், விபத்துகளை குறைக்க, நகரப்பகுதியில், ரோடு நான்கு வழித்தடமாக விரிவுபடுத்தப்பட உள்ளதாக நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.உடுமலை-தாராபுரம் மாநில நெடுஞ்சாலை, மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தால் பராமரிக்கப்படுகிறது. உடுமலை நகரில், பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, துவங்கும் மாநில நெடுஞ்சாலையில், ஆக்கிரமிப்பால், ரோடு மிக குறுகலாக மாறி விட்டது. குறுகலான இடத்தில், சென்டர் மீடியனும் வைக்கப்பட்டதால், போக்குவரத்து நெரிசல் அதிகரித்து விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.இது குறித்து 'தினமலரில்' செய்தி வெளியானது. இந்நிலையில், நகரப்பகுதியிலுள்ள, ரோட்டை விரிவுபடுத்த, அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.நெடுஞ்சாலைத்துறையினர் கூறியதாவது: உடுமலை-தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில், நகரப்பகுதியிலுள்ள, 2 கி.மீ., தொலைவுக்கு ரோட்டை விரிவுபடுத்த அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.அதன்படி, சுமார், 15.61 மீ., அளவுக்கு, நான்கு வழித்தடமாக ரோடு அமைக்கப்படும். இப்பணிகளுக்காக, அரசு, 4.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது; விரைவில் பணிகள் துவங்கும்.விரிவாக்க பணிகளுக்கு தேவையான இடம் அளவீடு செய்யப்பட்டுள்ளது. பணிகள் துவங்கியதும், வருவாய்த்துறை, நகராட்சி உதவியுடன் தற்காலிக மற்றும் நிரந்தர ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.இந்த ரோட்டில் மழை நீர் தேங்குவதால், ஓடுதளம் பாதிக்கும் பிரச்னைக்கு தீர்வு காண, ரோட்டோரத்தில் மழை நீர் வடிகால் அமைக்கப்படும். அவ்வகையில், அதிகளவு மழை நீர் தேங்கும் பகுதி கண்டறியப்பட்டு, 750 மீ., தொலைவுக்கு வடிகால் அமைத்து, மழை நீர் தேங்காமல், வெளியேற்றப்படும்.இவ்வாறு, நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.மாநில நெடுஞ்சாலை துவங்கும், பழைய பஸ் ஸ்டாண்ட் சந்திப்பு முதல், ராஜகாளியம்மன் கோவில் வரை ஒரு பகுதியாகவும், அங்கிருந்து சிறிது இடைவெளி விட்டு, 1 கி.மீ., தொலைவுக்கும் இத்திட்டத்தின் கீழ் ரோட்டை விரிவுபடுத்த நெடுஞ்சாலைத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X