பொது செய்தி

தமிழ்நாடு

மடத்துக்குளத்தில் உலர்களங்கள் இல்லை: ரோட்டில் மக்காச்சோளம் காயவைக்கும் அவலம்

Added : ஜன 11, 2020
Advertisement
 மடத்துக்குளத்தில் உலர்களங்கள் இல்லை: ரோட்டில் மக்காச்சோளம் காயவைக்கும் அவலம்

மடத்துக்குளம்:மடத்துக்குளம் அருகே, கிருஷ்ணாபுரம், நரசிங்காபுரம் பகுதி விவசாயிகள், உலர்களங்கள் இன்றி ரோட்டில் மக்காச்சோளத்தை காய வைத்துள்ளனர்.மடத்துக்குளம் அமராவதி புதிய ஆயக்கட்டுப்பகுதியில், மக்காச்சோளம் முக்கிய பயிராக உள்ளது. குறைவான பாசனநீரில், 100 நாட்களில் அறுவடைக்கு வந்து பலன் கொடுக்கும், இந்த பயிரை விவசாயிகள் விரும்பி சாகுபடி செய்கின்றனர்.தற்போது, மடத்துக்குளம் பகுதியில், 600க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு ஆகஸ்ட், இறுதியிலும் செப்டம்பர் மாத தொடக்கத்திலும் விதைத்த பயிர்கள், தற்போது வளர்ந்து அறுவடையை எட்டியுள்ளன. சில விளைநிலங்களில் அறுவடை நடந்து வருகிறது. அறுவடைக்குப்பின், காய வைத்துதான், எடையிடுவது வழக்கம். இந்த நிலையில், அமராவதி ஆலை - செங்கழனிப்புதுார் ரோடு, நரசிங்காபுரம், கிருஷ்ணாபுரம், பாப்பான்குளம் ரோடு பகுதியில், அறுவடை செய்த மக்காச்சோள பயிர்களை காய வைக்க போதிய உலர்களம் இன்றி, அமராவதி ஆலை அருகில், ரயில்வே கிராசிங் ஓரமுள்ள செங்கழனிப்புதுார் ரோட்டில் காயவைத்துள்ளனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 'இந்தப்பகுதி விளைநிலங்களில் அறுவடை செய்யப்படும், மக்காச்சோளங்களை உலர வைக்க, இடமின்றி மிகவும் அவதிப்படுகிறோம். இதற்குத்தீர்வாக, இங்கு உலர்களம் அமைக்க வேளாண்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X