இந்தியா

எம்.எல்.ஏ., குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மறுப்பு

Added : ஜன 11, 2020
Advertisement

புதுச்சேரி:சுகாதாரத்துறை தொடர்பாக பாகூர் எம்.எல்.ஏ., தனவேலு கூறிய குற்றச்சாட்டுகளை, அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியது:பாகூர் எம்.எல்.ஏ., தனவேலு, பாகூர் சுகாதார நிலைய செயல்பாடுகளை விமர்சித்துள்ளார். ஆம்புலன்ஸ் இல்லை, டிரைவர் இல்லை, மருந்து இல்லை என, அவர் கூறுவது ஆதாரமற்றது. பாகூர் சுகாதார நிலையத்தில் 2 ஆம்புலன்ஸ் , 6 டிரைவர்கள் உள்ளனர். மூன்று மாதத்திற்கு தேவையான மருந்து இருப்பு உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு ஆம்புலன்ஸ் டிரைவரை மாற்றிவிட்டு, ஒப்பந்த அடிப்படையில் தனக்கு வேண்டியவரை நியமிக்க கோரினார். அதற்கு நான் ஒப்புக் கொள்ளவில்லை. அதற்காக எனது துறையை பற்றி அவர் விமர்சித்துள்ளாரா என, தெரியவில்லை.எம்.எல்.ஏ., பேச்சை தொடர்ந்து கவர்னரும் விமர்சித்துள்ளார்.

எனவே, கவர்னர் நேரடி ஆய்வு செய்தால் உண்மை அவருக்கு தெரியவரும். முதல்வர், அமைச்சர்கள் தகுதியற்றவர்கள் என குற்றம் சாட்டியுள்ளார். எம்.எல்.ஏ., தகுதியானவரா என்பதை மக்கள் உணர்த்துவார்கள் என, தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X