கொசுக்கள் ராஜ்ஜியம் பொதுமக்கள் கடும் அவதி

Added : ஜன 11, 2020
Advertisement

மடத்துக்குளம்:மடத்துக்குளம் பஸ் ஸ்டாண்ட், நால்ரோடு பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாவதால், நோயாளிகள், பயணிகள் தவித்து வருகின்றனர்.மடத்துக்குளம் பஸ் ஸ்டாண்ட், நால்ரோடு பகுதியை தினமும், பல ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர். இங்குள்ள பேக்கரி, டீக்கடை, உணவகம், இறைச்சிக்கடைகளில் வெளியேற்றப்படும் கழிவுநீர் சாக்கடைகளில் தேங்குகிறது.இதுபோல் தேங்கியுள்ள கழிவுநீரில் லட்சக்கணக்கில் கொசுக்கள் உற்பத்தியாகிறது. இவை, சுற்றுப்பகுதியிலுள்ள மக்களை பதம் பார்க்கிறது.பொதுமக்கள் கூறுகையில், 'பஸ் ஸ்டாண்ட் தொடங்கி நால் ரோடு சுற்றுப்பகுதி முழுவதும் கொசுக்கள் ராஜ்ஜியம் தான். அரசு மருத்துவமனையில், மருத்துவர்கள், நோயாளிகள் பாரபட்சமின்றி கொசுக்கடியால் அவதிபடுகின்றனர். பயணிகள், மாணவர்கள், இந்த பகுதிகளை கடந்து செல்லும் மக்கள் நிலையும் இது தான். கொசுக்கள் உற்பத்தியை தடுக்கவும், அழிக்கவும் சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X