இந்தியா

புதுச்சேரியில் காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம்

Added : ஜன 11, 2020
Advertisement
 புதுச்சேரியில் காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம்

புதுச்சேரி:காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக, புதுச்சேரி தலைமை செயலகத்தில் 23வது காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆலோசனை கூட்டம் நடந்தது.

புதுச்சேரி மாநிலத்திற்குட்பட்ட காரைக்காலுக்கு ஆண்டுதோறும் கிடைக்க வேண்டிய 7 டி.எம்.சி., காவிரி நீர் கிடைக்காததால், விவசாய பரப்பளவு குறைந்து வருகிறது. இந்நிலையில் காவரி நீர் பங்கீடு தொடர்பாக ஆலோசனை நடத்த, தலைவர் நவீன்குமார், காவிரி நதி நீர் மேலாண்மை ஆணைய செயலர் நீரஜ்குமார் உள்ளிட்ட 16 பேர் கொண்ட காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழுவினர் நேற்று முன்தினம் புதுச்சேரி வந்தனர்.

அவர்கள் காரைக்காலில் ஆய்வு பணியை முடித்துக் கொண்டு நேற்று புதுச்சேரி வந்த அவர்கள், சட்டசபையில் முதல்வர் நாராயணசாமியை சந்தித்து பேசினர். இதில் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராஜ், வைத்திலிங்கம் எம்.பி., உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அதனை தொடர்ந்து, 23வது காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் கூட்டம் தலைமை செயலகத்தில் நடந்தது.

காவிரி நீர் ஒழுங்காற்று குழு தலைவர் நவீன்குமார் தலைமை தாங்கினார். காவிரி நீர் மேலாண்மை ஆணைய செயலர் நீரஜ்குமார் முன்னிலை வகித்தார். கர்நாடக தலைமை கூடுதல் செயலர் ராகேஷ் சிங், கர்நாடக தலைமை பொறியாளர்கள் சங்கர் கவுடா, பாலகிருஷ்ணன், பங்காரு சாமி, கேரள துணை தலைமை பொறியாளர் ஹரிகுமார், தமிழ்நாடு பொதுப்பணித்துறை முதன்மை செயலர் மணிவாசகன், காவிரி நீர் சட்ட ஆலோசகர் பட்டாபிராமன், கல்லணை கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன், புதுச்சேரி வளர்ச்சி ஆணையர் அன்பரசு, தலைமை பொறியாளர் மகாலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான காவிரி நீர் பங்கீடு, அணைகளின் நீர் மட்டம், பருவமழை பொழிவு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X