பொது செய்தி

தமிழ்நாடு

முதியோர் ஓய்வூதியருக்கும் பொங்கல் பரிசு வழங்கல்

Added : ஜன 11, 2020
Advertisement

உடுமலை:முதியோர் ஓய்வூதிய உதவி பெறும் கார்டுதாரர்களுக்கும், 1,000 ரூபாயுடன் கூடிய, பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது.திருப்பூர் மாவட்டத்தில், ஆறு லட்சத்து, 70 ஆயிரத்து, 225 அரிசி பெறும் ரேஷன் கார்டுகள் உள்ளன. அவற்றுடன், 36 ஆயிரத்து, 674 அன்னயோஜனா கார்டுகள்; 879 போலீஸ் கார்டுகள்; 13 ஆயிரத்து, 137 முதியோர் ஓய்வூதியதாரர் கார்டுகள்; 141 ஏ.என்.பி., கார்டுகள் உள்ளன. இவற்றுடன் சேர்த்து, 311 இலங்கை அகதிகளுக்கும், பொங்கல் பரிசு ஒதுக்கப்பட்டுள்ளது.சர்க்கரை கார்டுதாரர் நீங்கலாக, முதியோர் ஓய்வூதிய உதவி பெறுவோரும், 1,000 ரூபாயுடன் கூடிய, பொங்கல் பரிசு தொகுப்பை பெற்று, பொங்கல் பண்டிகையை கொண்டாடலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X