பொது செய்தி

தமிழ்நாடு

ஆண்டாள் நாச்சியார் கோவிலில் நாளை திருக்கல்யாண உற்சவம்

Added : ஜன 11, 2020
Advertisement

உடுமலை:உடுமலை, குறிஞ்சேரி ஆண்டாள் நாச்சியார் கோவிலில், திருக்கல்யாண உற்சவம் நாளை, நடக்கிறது.உடுமலை அருகே குறிஞ்சேரியில் புகழ் பெற்ற ஆண்டாள் நாச்சியார் கோவில் உள்ளது. இக்கோவிலில், மார்கழி மாத திருப்பாவை சேவை நாள்தோறும் சிறப்பு பூஜையாக நடக்கிறது.முக்கிய அம்சமான, கூடாரை வெல்லும் திருப்பாவை பாசுர தினத்தில், ஆண்டாள் நாச்சியார் ரங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நாளை, (12ம் தேதி) நடக்கிறது.திருக்கல்யாண வைபவத்தையொட்டி, இன்று காலை, பூமி லட்சுமி அம்மனுக்கு அபிேஷகம் நடக்கிறது. இரவு, 8:00 மணிக்கு கோவில் மண்டபத்தில் ரங்கமன்னார் ஆண்டாள் நாச்சியார் திருக்கல்யாண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடக்கிறது. நாளை, காலை, 6:00 மணிக்கு கோ பூஜை, தொடர்ந்து பாராயண சேவை நடக்கிறது. காலை, 8:00 மணிக்கு விநாயகர் கோவிலிலிருந்து, பக்தர்கள் திருமண சீர் எடுத்து வரும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, 11:00 மணிக்கு சுவாமிகளின் திருக்கல்யாணம் நடக்கிறது. இதை, திருச்சி சடகோப அய்யங்கார் நடத்தி வைக்கிறார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, விழாக்குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X