பொது செய்தி

தமிழ்நாடு

கோவிலில் இராப்பத்து உற்சவம் சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள்

Added : ஜன 11, 2020
Advertisement
 கோவிலில் இராப்பத்து உற்சவம் சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள்

உடுமலை:உடுமலை, சீனிவாச பெருமாள் கோவிலில், இராப்பத்து உற்சவத்தையொட்டி, பாண்டுரங்கன் அலங்காரத்தில் சிறப்பு பூஜை நடந்தது.உடுமலை, பெரியகடை வீதி, பூமீநீளா நாயகி சமேத சீனிவாச பெருமாள் கோவிலில், மார்கழி மாத சிறப்பு உற்சவம் 26ம் தேதி துவங்கியது.பகல் பத்து உற்சவம், 27 ம் தேதி முதல், ஜன.,5ம் தேதி வரை நடந்தது. வைகுண்ட ஏகாதசியையொட்டி, இராப்பத்து உற்சவம் 7ம் தேதி முதல், 16 ம் தேதி வரை நடக்கிறது. நாள்தோறும், மாலை, 6:00 மணி முதல், 8:00 மணி வரை, பெருமாளின் அவதாரங்களில் சிறப்பு அலங்காரமாக, சிறப்பு பூஜை மற்றும் பாசுர சேவை நடக்கிறது.நேற்று, ஸ்ரீபாண்டுரங்கன் உற்சவம் மற்றும் திருவாய்மொழி ஐந்தாம் மொழி பாசுர சேவை நடந்தது. இன்று, மாலை, தெப்போத்சவ வைபவம் நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X