பொது செய்தி

தமிழ்நாடு

அமராவதி ஆலை தொழிலாளர்கள் தொடர் போராட்டம் : மூன்று மாத சம்பள நிலுவை வழங்க வலியுறுத்தல்

Added : ஜன 11, 2020
Advertisement
 அமராவதி ஆலை தொழிலாளர்கள் தொடர் போராட்டம் : மூன்று மாத சம்பள நிலுவை வழங்க வலியுறுத்தல்

மடத்துக்குளம்:மடத்துக்குளம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், மூன்று மாதம் நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்க, வலியுறுத்தி, தொழிலாளர்கள் இரண்டாவது நாளாக போராட்டம் நடத்தினர்.திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே, அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இங்கு ஆண்டு தோறும் ஏப்ரல் தொடங்கி, செப்டம்பர் வரை ஆறு மாதம் அரவைப்பருவமாகும். தினமும், 1, 250 டன் அரவை செய்யும் திறன்கொண்ட இயந்திரங்கள் ஆலையில் உள்ளன. 2018 - 19 ம் ஆண்டில், 1,26,733 டன் கரும்பு அரவை நடந்தது.இந்த ஆலையில், 400 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், 30க்கும் மேற்பட்ட அலுவலர்கள் உள்ளனர். பணியில் உள்ள இவர்களுக்கு சம்பளம் வழங்குவதில், இழுபறி ஏற்பட்டது.கடந்த இரண்டுஆண்டுகளாக இந்த பிரச்னை உள்ளது. இதற்குத்தீர்வாக கடன் பெற்று, நெருக்கடியை சமாளிக்க ஆலை நிர்வாகத்தினர் திட்டமிட்டு, 11 கோடி ரூபாய் நிதி கடன் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு பல மாதங் களுக்கு முன்பு,கோரிக்கைவிடுத்தனர்.இதை ஏற்ற அரசு, 2019 நவம்பர், மாதம், 10 கோடியே 99 லட்சத்து 61 ஆயிரம் ரூபாய் நிதியை, வழிவகை கடனாக வழங்கியது.ஆனால், இன்று வரை சம்பளம் வழங்கப்படவில்லை. தற்போது, மூன்றுமாத சம்பளம் நிலுவை ஏற்பட்டுள்ளது. இதனால்,அதிருப்தி அடைந்த தொழிலாளர்கள் நேற்றுமுன்தினம் குடும்பத்துடன் ஆலை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.தொடர்ந்து, இரண்டாவது நாளாக நேற்றும், அலுவலக வளாகத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.தினசரி செலவுக்கே சிரமம்இதுகுறித்து தொழிலாளர்கள் கூறுகையில், 'அரசு கடன் வழங்கியும், அந்த தொகையில் எங்களுக்கு சம்பளம் வழங்கவில்லை. மீண்டும் மூன்று மாதம் சம்பளம் நிலுவையாக உள்ளது. எங்கள் குடும்பங்கள் மிகவும் சிரமமான சூழ்நிலையில் உள்ளது. தினசரி செலவுக்கே திணறுகிறோம். இதனால், நிலுவையாகவுள்ள சம்பளம் வழங்கும் வரை, குடும்பத்துடன் ஆலை அலுவலக வளாகத்தில் தங்கி, போராட்டம் நடத்துவோம்' என்றனர்.ஆலை நிர்வாகம் தரப்பில், மேலாண்மை இயக்குனர் உத்தரவுக்கிணங்க, வரும் 13ம் தேதி இரண்டு மாத ஊதியம் தொழிலாளர்கள் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, ஆலைத்தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X