இந்தியா

புதுமையான 'ஷாப்பிங்' அனுபவம் மகிழ்ச்சியில் திளைத்த மகளிர்

Added : ஜன 11, 2020
Advertisement
 புதுமையான 'ஷாப்பிங்' அனுபவம் மகிழ்ச்சியில் திளைத்த மகளிர்

புதுச்சேரியில் கடலுார் சாலை ஏ.எப்.டி., மைதானத்தில் நடந்து வரும் தினமலர் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சியின் இரண்டாவது நாளான நேற்றும் பெண்கள் உற்சாகமாய் குடும்பத்துடன் வந்து பொருட்களை வாங்கிச் சென்றனர்.

பெண்களுக்கு போட்டியாக, ஆண்களும் தங்களுக்கான பொருட்களை வாங்க கூட்டம், கூட்டமாக அரங்கில் ஷாப்பிங் செய்து, மனதுக்கு பிடிச்சதை அள்ளிக்கிட்டு போனார்கள். அவர்களின் ஷாப்பிங் அனுபவம் இதோ...

மிஸ் பண்ணது கிடையாது

கண்காட்சியில் லேடீஸ் ஹேண்ட் பேக், பர்ஸ் பலவிதமான மாடல்களில் இருக்கு. அந்த ஸ்டால்களை நான் ஒன்று விடாமல் பார்த்தேன். அதில், என் கண்கள் விரும்பிய பொருட்களை வாங்கியாச்சு.புட் கோர்ட்டில் திண்டுக்கல் வேணு பிரியாணி . அடிச்சுக்க முடியாத டேஸ்ட் போங்க... இந்த கண்காட்சி எங்களுக்கு கிடைச்ச மிகப் பெரிய மகிழ்ச்சி. தினமலர் எக்ஸ்போவை எந்த ஆண்டும் மிஸ் பண்ணது கிடையாது. கண்காட்சி நடக்கும் ஒவ்வொரு நாளும் வருவேன். புதுப்புது கலெக் ஷன்களை அள்ளிகிட்டு போவேன், கண்காட்சி வரலாற்றில், இந்த கண்காட்சிக்கு முதல் இடம் உண்டு என்பதில், எவ்வித சந்தேகமும் இல்லை.

உமா விஜயகுமார், கடலுார்

மறக்க முடியாத ஷாப்பிங்

நான் எதிர்பார்த்து வந்த மாதிரியே எல்லா பொருட்களும் நல்லாவே இருக்கு. அதுவும் 'ஏசி' ஸ்டால்கள் கொளுத்துற வெயிலுக்கு இதமாகுளிர்ச்சியை கொடுத்தது. புட் கோர்ட் செம. அசத்திட்டாங்க போங்க.. மறக்க முடியாத ஷாப்பிங் அனுபவத்தை இந்தாண்டு தினமலர் எங்களுக்கு கொடுத்திருக்கு.ஆதித்யா, கடலுார்.கண்காட்சிகளின் 'ஹீரோ'அற்புதமான ஷாப்பிங் அனுபவம் இது. இந்த முறை பார்க்க வித்தியாசமான ஹாண்ட் பேக் வாங்கி இருக்கேன். பல மாநிலங்களை சேர்ந்த சுரிதார்களை தேடி, தேடி செலக்ட் பண்ணி பிரமித்து போய்விட்டேன் . ஒரே வார்த்தையில சொல்லனும்னா இது கண்காட்சிகளின் 'ஹீரோ' என்று சொல்லலாம். அத்தனையும் அட்டகாசமா இருக்கு, அரங்கம் எல்லாம் சும்மா அசத்தலா களைகட்டுது.

சங்கீதா, புதுச்சேரி.

உணவு வகைகள் 'செம'

எங்க கல்லுாரியில இருக்குற மொத்த பெண்களும் ஷாப்பிங் பண்ணியிருக்கோம். புட்கோர்ட்ல விதவிதமான உணவுகளை பார்த்து அசந்துபோய்விட்டோம் அசைவ உணவு தான் இருக்கும் என நினைச்சேன். ஆனால் வெஜிடேரியன் உணவு செம துாக்கலா டேஸ்ட்டா இருக்கு. இது கண்காட்சியா, இல்லை ஒரு ஊரான்னு ஆச்சர்யப்படும் அளவுக்கு மெகா ஸ்டால்கள் இருக்கிறது.
திவ்யா, பண்ரூட்டி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X