பொது செய்தி

தமிழ்நாடு

98 வயது ஆசிரியரை சந்தித்த 83 வயது மாணவர்கள் நெகிழ்ச்சி

Updated : ஜன 11, 2020 | Added : ஜன 11, 2020
Share
Advertisement
 98 வயது ஆசிரியரை சந்தித்த 83 வயது மாணவர்கள் நெகிழ்ச்சி

உடுமலை:உடுமலை அருகே, 98 வயதான ஆசிரியரை, 83 வயதுடைய மாணவர்கள் சந்தித்து, உரையாடி மகிழ்ந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடுமலை புங்கமுத்துாரில், காந்திகலா நிலையம் எனப்படும் அரசு உதவி பெறும் பள்ளி உள்ளது. இப்பள்ளியில், 1948 முதல் 1954 வரை தொடர்ந்து இணையாகப் படித்தவர்கள், தங்களுக்குள்ளான நட்புறவை தொடர்ந்து பேணிக்காத்து வந்துள்ளனர்.அவர்களில், எட்டு பேர், சமீபத்தில், நேரடியாக சந்திக்க திட்டமிட்டுள்ளனர். எண்பது வயதை தாண்டிய நிலையிலும், மீண்டும் தனது குழந்தைப்பள்ளிப் பருவ நினைவுகளை அசை போடும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்துள்ளது.அதிலும், தங்களுக்கு வகுப்பெடுத்த, ஆசிரியர் ஒருவரை சந்திக்கும் வாய்ப்பும், அவர்களுக்கு கிடைத்துள்ளது.

அவ்வகையில், உடுமலை காந்திநகரில் தங்களுக்கு, ஏழாம் வகுப்பு பாடம் நடத்திய, ஆசிரியர் லட்சுமி, 98 வயதிலும், ஆரோக்கியமாக இருப்பதை அறிந்தனர்.உடனடியாக, 83 வயதை எட்டிய, அந்த மாணவர்கள், 98 வயதுடைய தங்கள் ஆசிரியரை நேரில் சந்தித்து, வியப்பையும், ஆச்சரியத்தையும் வெளிப்படுத்தினர். இந்நிகழ்வில், பங்கேற்ற, சுந்தரராஜ், கோதண்டம், நடராஜ், சண்முகம், திருமலைசாமி ஆகிய ஐந்து பேரும் பள்ளி ஆசிரியர்களாக பணியாற்றி பணிநிறைவு பெற்றவர்கள் ஆவர்.

மேலும், உடுமலை அரசு கலைக்கல்லுாரி முன்னாள் துணை முதல்வர் பாலசுப்பிரமணியம், ஓய்வு பெற்ற, மின்வாரிய தலைமை பொறியாளர் செல்லமுத்து, சென்னை தலைமைச் செயலகக் கருவூல அதிகாரி ஓய்வு குமாரராஜா ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர்.இவர்களை உள்ளடக்கிய, காந்தி கலா நிலைய மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் மன்றத்தின் சார்பில், பள்ளியில் ஒரு கலையரங்கம் கட்டி தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X