ருசிக்கலாம் வாங்க!| Dinamalar

இந்தியா

ருசிக்கலாம் வாங்க!

Added : ஜன 11, 2020
 ருசிக்கலாம் வாங்க!

புதுச்சேரி கடலுார் சாலை ஏ.எப்.டி., மைதானத்தில் நடைபெறும் தினமலர் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சியில், கைநிறைய பொருட்கள் வாங்கிக் கொண்டு அரங்கத்தை விட்டு வெளியே வந்தால்...

புட் கோர்ட் உங்களை மணக்க மணக்க வரவேற்கும்.எங்கும் ருசிக்க முடியாத திண்டுக்கல் வேணு பிரியாணி. தினமலர் கண்காட்சி புட் கோர்ட்டில் முதல் ஸ்டாலில் பட்டைய கிளப்பிக்கொண்டு இருக்கிறது. ஸ்டாலை நெருங்கும்போதே... பிரியாணியில் இருந்து வெளி வரும் வாசம் உங்களை சுண்டி இழுத்துவிடும்.

சாப்பிட்டு பார்த்து அடுத்து.,. அடுத்து ஆர்டர் கொடுத்துக்கிட்டே இருப்பீங்க..அப்படியே அடுத்த ஸ்டால் போனா மதுரை பன் புரோட்டா. சாப்பிட்டு பாருங்க.. பஞ்சு போன்ற பன் புரோட்டாவை வாழ்நாளில் மறக்கவே மாட்டீங்க.... அதற்கு அடுத்து பான்-பான் ஸ்டால்.. இங்கு இருக்கும் விதவிதமான ஐஸ்கிரீம்கள் ஒரு முறை டேஸ்ட் பண்ணி பார்த்தீங்க வீட்டுக்கு போகவே மாட்டீங்க.. இன்னும் வேணும்..நிறைய வேணும்னு நண்டு பிடியாக அடம் பிடிப்பீங்க...

அடுத்து ஆந்திரா புட்ஸ் ஸ்டால்.... பஸ், ரயில் ஏறாமல் பைசா செலவின்றி ஆந்திராவிற்கு சென்றால் எப்படி இருக்கும். இதோ அதற்கும் ஏற்பாடு செய்துவிட்டது தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் கண்காட்சி.. ஆளை மயக்கும் ஆந்திர உணவு உங்களை தேடி வந்து இருக்கிறது. பிறகென்ன உணவு பிரியர்களுக்கு உயர்தர விருந்து ரெடி..

மதுரை சக்தி உயர் தர சைவம், அசைவ ஸ்டால், சைனீஸ் நுாடுல்ஸ் ,மசாலபூரி, பேல்பூரி, பாவ் பாஜி, தை பூரி, பிரைடு ரைஸ், சில்லி சிக்கன் உங்களை நேசம் கொண்டு விடும். புரோட்டோவிற்கு பெயர் பெற்றது விருது நகர் புரோட்டா ஆகும். கண்காட்சியில் வருவோருக்கு முறுமுறு விருது நகர் புரோட்டா ஸ்பெஷல் விருந்தாக இருக்கும். ஏ.எப்.டி.,மைதானத்தில் சாப்பிடாவிட்டால் இதைவிட நல்ல வாய்ப்பு கிடைக்காது.

இதுமட்டுமின்றி டி.எப்.சி., ரெஸ்டாரண்டின் சிக்கன் பீசா, சீஸ் பிசா, பன்னீர் பீசா, வெஜ் பீசா, லெஜிஸ்டரி புட்டரி ஸ்டாலில் சிக்கன் விங்ஸ் புட்கோர்ட்டில் கமகமக்கிறது. எதிலும் வித்தியாசமாக தேடுபவர்களுக்கு கேரளாவின் மூங்கில் அரிசி பாயாசம், பால் அடை பாயாசம், அடை பாயாசம் நிறைந்த ஸ்டால் சிறந்த சாய்ஸ்.. தோசை கிங்ஸ் ஸ்டாலை நெருங்கும்போதே. அம்மாடியோவ் இவ்வளவு தோசை வகைகளை பாரேன் என்று அசந்துவிடுவீர்கள்..

வயிறு நிரம்பியாச்சு ஏதாவது குடிக்க நினைப்பவர்களுக்கு கரும்பு ஜூஷ், ஜிகர்தண்டா, வெரைட்டி ஐஸ் என அனைத்து ஸ்டால்களும் அடுத்தடுத்து வரிசை கட்டி நிற்கிறது. அதுமட்டுமா பர்க்கர், சாண்ட்விட்ச், பீசா, ஐஸ்கோலா, மசாலாபூரி, பேல் பூரி தயாரிப்பில் தனித்துவம் பெற்ற ஸ்டால்கள் இடம் பெற்று புதுச்சேரி, கடலுார், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்ட மக்களின் ரசனைக்கு சவால் விடுகின்றன. என்ன.. சுவையான சவாலில் பங்கேற்க நீங்களும் ரெடியா.... குடும்பத்தோடு வாங்க சந்தோஷமாய் சாப்பிட்டுவிட்டு போங்க.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X