பொது செய்தி

தமிழ்நாடு

காமராஜர் விருது பெற்ற இரட்டை சகோதரிகள்: குடிமங்கலம் அரசு பள்ளிக்கு பெருமை சேர்ப்பு

Added : ஜன 11, 2020
Advertisement
 காமராஜர் விருது பெற்ற இரட்டை சகோதரிகள்: குடிமங்கலம் அரசு பள்ளிக்கு பெருமை சேர்ப்பு

உடுமலை:குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த இரட்டை சகோதரி மாணவியர், இருவரும் காமராஜர் விருது பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.கல்வியாண்டுதோறும், கல்வி இணைசெயல்பாடுகள் மற்றும் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு, காமராஜர் விருது வழங்கப்படுகிறது. கடந்த கல்வியாண்டுக்கான விருது நடப்பாண்டில் வழங்கப்பட்டது.இதில், குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்தாண்டு, பிளஸ் 2 முடித்த இரண்டு மாணவியர் விருதை பெற்றுள்ளனர். ரம்யா மற்றும் லாவண்யா இருவரும், இரட்டை சகோதரிகளாக இருந்து, இரண்டு மாணவியரும் விருதை பெற்று பள்ளிக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளனர். விருது பெற்ற, மாணவியருக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில், ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.பள்ளி தலைமையாசிரியர் பழனிச்சாமி கூறியதாவது: மாணவியர் இருவரும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 489 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றனர். தொடர்ந்து பிளஸ் 1 பொதுத்தேர்வில், ரம்யா 542 மற்றும் லாவண்யா 530 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதல் மற்றும் இரண்டாமிடம் பெற்றனர்.பிளஸ் 2 வகுப்பிலும், இந்த இரண்டு மாணவியர்தான் பள்ளி அளவில் முதல் மற்றும் இரண்டாமிடம் பெற்றனர். தற்போது மாநில அரசின் காமராஜர் விருதையும், இரண்டு மாணவியரும் ஒரே கல்வியாண்டில் பெற்றிருப்பது, அனைவருக்கும் மகிழ்ச்சியையும் பள்ளிக்கு பெருமையையும் ஏற்படுத்தியுள்ளது.இவர்களது பெற்றோர், விவசாயம் பார்க்கின்றனர். ஒரே வீட்டில் இரண்டு குழந்தைகளும் இவ்வாறு விருது பெற்றிருப்பது பெற்றோரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X