பொது செய்தி

தமிழ்நாடு

சதுரகிரியில் பவுர்ணமி வழிபாடு

Added : ஜன 11, 2020
Advertisement

வத்திராயிருப்பு:சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் மார்கழி பவுர்ணமி வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

நேற்று அதிகாலை முதல் தாணிப்பாறையில் குவிந்த பக்தர்கள் காலை 6:00 மணிக்குமேல் மலையேற அனுமதிக்கபட்டனர். சுந்தரமகாலிங்கம் கோயிலில் நடந்த பவுர்ணமி வழிபாடு, சந்தனமகாலிங்கம் கோயிலில் நடந்த சித்தர் பூஜையிலும் பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

பக்தர்களின் அடிப்படை வசதிகளை கோயில் செயல்அலுவலர் விஸ்வநாதன் தலைமையில் கோயில் அலுவலர்கள் செய்திருந்தனர். வத்திராயிருப்பு மற்றும் மதுரை மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று பகல் 12:00 மணிவரை பக்தர்கள் கோயிலுக்கு அனுமதிக்கபடுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X