பொது செய்தி

தமிழ்நாடு

பாதாள சாக்கடையால் பள்ளமான ரோடு: சிரமத்தில் சிதம்பரம் நகர் மக்கள்

Added : ஜன 11, 2020
Share
Advertisement
 பாதாள சாக்கடையால் பள்ளமான ரோடு:  சிரமத்தில் சிதம்பரம் நகர் மக்கள்

சாத்துார்:சாத்துார் சிதம்பரம் நகரில் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. வாறுகால்களில் குப்பை குவிந்து காணப்படுகிறது. திறந்த வெளியில் குப்பை கொட்டப்படுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
இந்நகரில் கடந்த பல மாதங்களுக்கு முன்பு பாதாளசாக்கடை விரிவாக்கம் பணி துவங்கியது. ஆங்காங்கே மேன்ஹோல் அமைக்கப்பட்டது. வீடுகளுக்கு இணைப்பு கொடுப்பதற்காக குழாய் பதிக்கப்பட்டது. பல முறை ரோடு தோண்டப்பட்ட நிலையில் குண்டும்குழியுமாக மாறிவிட்டது. லோடு வாகனங்கள் குழிக்குள் சிக்கி கொள்கின்றன. சைக்கிள் பழகும் சிறுவர்கள் தடுமாறி விழுகின்றனர்.

இரவு நேரத்தில் தெரு விளக்குகள் பழுதாகி எரியாததால் பொதுமக்கள் கையில் விளக்குகளுடன் நடமாடும் நிலை உள்ளது.பாதாளசாக்கடை பணிகளை விரைந்து முடிப்பதுடன் புதிய ரோடு போடவும் குப்பையை அகற்றவும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாறுகால் தள்ள ஆட்கள் வருவதில்லை. குப்பை வாறுகாலில் குவிந்துள்ளதால் சாக்கடை செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது.கொசு உற்பத்தி அதிகமாக உள்ளது. இரவில் மட்டுமின்றி பகலிலும் துாக்கமின்றி தவிக்கும் நிலை உள்ளது.வாறுகால்களை சுத்தம் செய்து தெருவில் குப்பை கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- பொன்.இளங்கோவன், வியாபாரி.

பாதாள சாக்கடைப்பணிக்காக அடிக்கடி ரோட்டை தோண்டியதால் குண்டும் குழியுமாக மாறிவிட்டது.சில மாதங்களுக்கு முன்பு ஜல்லி கற்களைகொட்டி புதிய ரோடு போடும் ஆரம்பித்தது. இதற்குள்ளாக மீண்டும் பாதாளசாக்கடைக்காக தோண்டி விட்டனர். தற்போது மேன்ேஹால் போட்டுள்ளனர். இவற்றை இணைக்கும் குழாய்கள் பதிக்கவில்லை. இதனால் ரோடு போடும் பணியும் தாமதம் ஆகிறது.
- பி.ஆறுமுகச்சாமி, குடும்பத்தலைவர்.

வெங்கடாசலபுரம் ஊராட்சி பகுதியில் வசிப்பவர்கள் குப்பை கொட்டுகின்றனர். குப்பைக் கொட்டும் இடம் அருகே பிளேஸ்கூல் உள்ளதால் குப்பையின் துர்நாற்றத்தால் குழந்தைகள் பாதிக்கின்றனர். குப்பையை வீட்டிற்கு வந்து துப்புரவு தொழிலாளர்கள் வாங்கி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஜி.முருகேசபாண்டியன், குடும்பத்தலைவர்.

நடவடிக்கை எடுக்கப்படும்
சிதம்பரம் நகரில் வாறுகால் சுத்தம் செய்யவும், குப்பைத் தொட்டி வைக்கவும் சுகாதாரஅலுவலர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
- ராஜமாணிக்கம், நகராட்சி கமிஷனர், சாத்துார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X