விருதுநகரில் பட்டம் வினாடி வினா | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விருதுநகரில் பட்டம் வினாடி வினா

Added : ஜன 11, 2020
 விருதுநகரில் பட்டம் வினாடி வினா

விருதுநகர்:தினமலர் மாணவர் பதிப்பு 'பட்டம்' இதழ் சார்பில் மாணவர்களுக்கான 'பதில் சொல் அமெரிக்கா செல்' என்ற வினாடி வினா போட்டி விருதுநகரில் திருவள்ளுவர் வித்யாசாலா நடுநிலைப்பள்ளியில் நடந்தது.

மாணவர்களுக்கு சிறப்பான அடித்தளம் அமைத்து தரும் வகையில் தினமலர் நாளிதழ் 'பட்டம்' என்ற மாணவர்கள் பதிப்பை வெளியிடுகிறது. பொது அறிவை வளர்க்கும் வகையில் மாணவர்களுக்கான வினாடி வினா நடத்தப்படுகிறது. அதன்படி விருதுநகர் திருவள்ளுவர் வித்யாசாலா நடுநிலைப்பள்ளியில் நடந்த போட்டியின் துவக்கமாக எழுத்து தேர்வு நடந்தது.

இவர்களில் 16 மாணவர்களை ஆசிரியர் குழுவினர் தேர்வு செய்தனர். அவர்களுக்கான வினாடி வினா போட்டி 8 குழுக்களாக பிரிந்து நடத்தப்பட்டது.ஆசிரியைகள் யமுனாதேவி, சுந்தரவள்ளி மீனாட்சி போட்டியை நடத்தினர். 'டி' பிரிவு மாணவர்கள் சந்துரு, விஷ்வமல்லீஸ்வரன் முதல் பரிசை பெற்றனர். பங்கேற்ற மாணவர்களுக்கு மெடல்கள், சான்றிதழ்களை பள்ளி தலைமையாசிரியர் தனசேகரன் வழங்கினார். ஆசிரியர்கள் ஆதிநாராயணன், ஆனந்தக்குமார் ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர். இதை போத்தீஸ், வீனஸ் எலெக்ட்ரானிக்ஸ், லோட்டோ காபி பைட், குயின் மீரா இன்டர்நேஷனல் பள்ளி இணைந்து வழங்கின.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X