பஸ் நிறுத்தத்தில் வியாபாரம்:போக்குவரத்து பாதிப்பு

Added : ஜன 11, 2020
Advertisement

பந்தலுார்:பந்தலுார் பஜாரில் பஸ்கள் நிறுத்தும் இடத்தில், தொடர்ச்சியாக வியாபாரம் செய்வதால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.பந்தலுார் பஜார் பகுதி தமிழக - -கேரள இணைப்பு சாலைகள் உள்ளடக்கிய முக்கியமான சந்திப்பு பகுதியாக உள்ளது. அத்துடன் தாசில்தார் அலுவலகம், அரசு மருத்துவமனை, கோர்ட் மற்றும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்குச் சென்று வரும் மாணவர்கள், தமிழகம் மற்றும் கேரளா மாநிலம் சென்று வரும் பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இவர்கள் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள நிழற்குடை மற்றும் அதனை ஒட்டிய கடைகளின் முன்பாக பஸ்களுக்கு காத்திருக்கின்றனர்.இந்நிலையில், கூடலுார் பகுதியில் இருந்து தினசரி அங்கு வரும் வியாபாரி ஒருவர், தனது வாகனத்தை இந்த பகுதியில் நிறுத்தி பல மணி நேரங்கள் வியாபாரத்தில் ஈடுபடுகிறார்.இதுகுறித்து புகார் கொடுத்தும் போலீசார் கண்டு கொள்ள மறுத்து வரும் நிலையில், பஸ்களில் ஏற வரும் பயணிகள் மற்றும் வயோதிகர்கள், மாணவர்கள் நிலைதடுமாறி விழுந்து பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. கடந்த காலங்களில் இதுபோன்ற பிரச்னையால் மாணவர்கள் சிலர் வாகனங்களில் சிக்கி பாதிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. எனவே, இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு சாலை ஓரங்கள் மற்றும் முக்கிய சந்திப்பு இடங்களில் வாகனங்களை நிறுத்தி வியாபாரம் செய்ய தடை விதிக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X