பொது செய்தி

தமிழ்நாடு

ஆருத்ரா தரிசனம் தொடர்ச்சி...

Added : ஜன 11, 2020
Advertisement

விருதுநகர்:விருதுநகர் மேலத்தெரு சொக்கநாதர் கோயிலில் அதிகாலையில் நடராஜருக்கு 36 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது.

வாலசுப்பிரமணியசுவாமி கோயிலில் சிறப்பு அலங்காரங்களுடன் நடராஜர் காட்சி தந்தார். இங்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.சிவகாசிசிவகாசி சிவன், முருகன், கடைக்கோயில் மாரியம்மன், பத்திரகாளியம்மன் கோயில்களில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு திருவாதிரை திருவிழா நடந்தது.இதை முன்னிட்டு கடந்த ஒரு வாரமாக செவ்வந்திப்பூ சப்பரம் சிறப்பு அலங்காரத்தில் உருவாக்கப்பட்டது.

காலையில் அனைத்து கோயில்களிலும் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. சிவன் கோயில் சப்பரத்தில் மாணிக்கவாசகர், சிவகாமி, நடராஜர், முருகன் கோயில் சப்பரத்தில் நடராஜர், சிவகாமி, மாணிக்கவாசகர் , கடைக்கோயில் சப்பரத்தில் மாரியம்மன், பத்திரகாளியம்மன் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் ஊர்வலமாக வர பக்தர்கள் தரிசனம் செய்தனர்

ராஜபாளையம்

ராஜபாளையம் மாயூரநாதசுவாமி கோயிலில் ஜன.1முதல் 9 நாட்களுக்கு தினமும் மாலை 5:00 மணிக்கு 100 லிட்டர்பாலில் சிறப்பு அபிேஷகம், அலங்காரம் தீபாராதனை, அன்னதானம் நடந்தது.பஞ்ச வாத்தியங்கள் முழங்க ஓதுவார் திருவெம்பாவை பாட வழிபாடு நடைபெற்றது. 10ம் நாளான நேற்று அதிகாலை 3:00 மணிக்கு அபிேஷகங்கள் நடக்க பூக்களால் ராஜ அலங்காரத்தில் காட்சி தந்த சுவாமிமாட வீதிகளில் உலா வந்தார்.

ஏற்பாடுகளை பன்னிரு திருமுறை மன்ற தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் அடியார்கள் செய்திருந்தனர்

.* ராஜபாளையம் சொக்கர் கோயிலில் அதிகாலை 4:00 மணி முதல் அபிேஷகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. சிவகாமிஅம்மன் சமேத நடராஜர் மாணிக்கவாசருடன் உள் பிரகாரங்களில் வலம் வந்தார். திரளான பக்தர்கள் வழிபட்டனர்.

* தெற்கு வெங்காநல்லுார் சிதம்பரேஸ்வரர் கோயில் மற்றும் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய நாதர் சுவாமி கோயிலிலும் வழிபாடுகளுடன் சிறப்பு நிகழ்ச்சிகள்நடந்தது.

ஸ்ரீவில்லிபுத்துார்

ஸ்ரீவில்லிபுத்துார் மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயிலில்ஆருத்ரா தரிசன உற்ஸவம் நடந்தது.இதை முன்னிட்டு அதிகாலை 3:00 மணிக்கு கோயில்நடை திறக்கப்பட்டு நடராஜருக்கு 18 வகை அபிஷேகம் , சிறப்பு பூஜைகளை ரகு மற்றும் ரமேஷ்பட்டர் நடத்தினர். பின்னர் திருப்பள்ளிஎழுச்சியுடன் நடராஜருக்கு ஆருத்ரசிறப்பு பூஜைகளும்நடைபெற்றது.

இதனயைடுத்து சித்திர சபையில் நடராஜர், சோமாஸ்கந்தர் எதிர்சேவை நடக்க ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு திருவாதிரைக்களி வழங்கப்பட்டது. பின்னர் நடராஜர், சிவகாமிஅம்பாள், மாணிக்கவாசகர் வீதிஉலா நடந்தது. ஏற்பாடுகளை தக்கார்இளங்கோவன், செயல்அலுவலர் ஜவகர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X