கொலக்கம்பை பகுதியில் யானைகள் வனத்துறையினர் விரட்டியடிப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொலக்கம்பை பகுதியில் யானைகள் வனத்துறையினர் விரட்டியடிப்பு

Added : ஜன 11, 2020
 கொலக்கம்பை பகுதியில் யானைகள்  வனத்துறையினர் விரட்டியடிப்பு

குன்னுார்:குன்னுார் கொலக்கம்பை கிரேக்மோர் பகுதியில் குட்டியுடன், சுற்றி திரிந்த காட்டு யானைகளை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டினர்.குன்னுார் கொலக்கம்பை அருகே, டெரேமியா, கெராடாலீஸ் உள்ளிட்ட பகுதிகளில், கடந்த சில நாட்களாக குட்டியுடன், காட்டு யானைகள் முகாமிட்டு வருகின்றன. குறிப்பாக, இப்பகுதியில் உள்ள தேயிலை மற்றும் காபி தோட்டங்களில் யானைகள் முகாமிட்டு உள்ளதால், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் தேயிலை பறிப்பது மற்றும் தோட்டப் பராமரிப்பு பணிகளை, அச்சத்திற்கு இடையே, மேற்கொண்டு வருகின்றனர்.'அச்சுறுத்தி வரும் காட்டு யானைகளை, அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும்,' என, விவசாயிகள், தொழிலாளர்கள் உட்பட, பகுதி மக்கள் வலியுறுத்தினர். அதன்படி, வனத்துறையினர் நேற்று சம்பவ இடத்திற்கு சென்று, தோட்டங்களில் முகாமிட்டிருந்த யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X