பொது செய்தி

தமிழ்நாடு

கூடலுார் அருகே அரசு நிலம் மீட்பு பழங்குடியினரிடம் ஒப்படைப்பு

Added : ஜன 11, 2020
Advertisement
 கூடலுார் அருகே அரசு நிலம் மீட்பு பழங்குடியினரிடம் ஒப்படைப்பு

கூடலுார்:கூடலுார் அருகே, ஆக்கிரமிப்பிலிருந்த மீட்கப்பட்ட, 1.75 ஏக்கர் அரசு நிலம், இயற்கை விவசாயத்திற்காக பழங்குடி மக்களிடம் ஒப்படைத்தனர்.கூடலுார் மைசூரு தேசிய நெடுஞ்சாலை, கோர்ட் அருகே, 1.75 ஏக்கர் அரசு நிலம் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்தது. கூடலுார் ஆர்.டி.ஓ., ராஜ்குமார் உத்தரவுபடி வருவாய் துறையினர் கடந்த வாரம் அப்பகுதியில் ஆய்வு செய்து, தனியார் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டனர். மீட்கப்பட்ட அந்த நிலத்தை, ஏழுமுறம் பழங்குடி கிராம மக்களிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.இந்நிலையில், கிராம மக்கள் நேற்று, நிலத்தில் பூஜை செய்து விவசாய பணிகளை துவங்கினர். பணிகளை, கூடலுார் தாசில்தார் சங்கீதாராணி, வருவாய் ஆய்வாளர் ரமேஷ் விவசாய பணிகளை துவங்கி வைத்தனர்.கூடலுார் ஆர்.டி.ஓ., ராஜ்குமார் கூறுகையில், ''ஏழுமுறம் பழங்குடி மக்களிடம், வீட்டு தோட்டங்களில் இயற்கை விவசாயத்தை சிறப்பாக செய்து வருகின்றனர். அவர்கள் விவசாயம் செய்வதற்கு நிலம் வழங்கும்படி கோரியிருந்தனர். இந்நிலையில், கோர்ட் அருகே, தனிநபர் ஆக்கிரமித்திருந்த மீட்கப்பட்ட அரசு நிலம், பழங்குடி மக்கள் விவசாய பணிக்காக வழங்கப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X