பொது செய்தி

தமிழ்நாடு

'தினமலர்' மெகா வினாடி--வினா: மாணவர்கள் ஆர்வம்

Added : ஜன 11, 2020
Advertisement

ஊட்டி,:'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில், 'பதில் சொல்; அமெரிக்கா செல்' என்னும், பள்ளி மாணவர்களுக்கான வினாடி--வினா போட்டி ஊட்டியில் நடந்தது.'தினமலர்' பட்டம் இதழ் கடந்த ஆண்டு முதல் மாணவர்களின் பொது அறிவு திறனை வளர்க்கும் வகையில், மாநில அளவில் வினாடி--வினா போட்டியை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஊட்டி அருகே, கே.ஜே.ஜி., மெட்ரிக்; குன்னுார் சாந்தி விஜய் பள்ளிகளில் முதல் தகுதி தேர்வு போட்டியை நடத்தியது.இப்பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான முறையே, 100 மாணவர்களுக்கு பொது அறிவு தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டன. அதில், சிறப்பாக பதில்கள் எழுதிய தலா, 8 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு இரண்டாம் கட்ட வினாடி---வினா போட்டி நடந்தது.கே.ஜே.ஜி., மெட்ரிக் பள்ளிகே.ஜே.ஜி., மெட்ரிக் பள்ளியில் நடந்த போட்டியில், 'ஏ' அணியில் ரக் ஷனா (8ம் வகுப்பு) ஜனனி (9ம் வகுப்பு); 'பி' அணியில், நித்திகா (8ம் வகுப்பு) நிவேதா (9ம் வகுப்பு); 'சி' அணியில் மதுராந்தி (8ம் வகுப்பு) அம்ரிதா (9ம் வகுப்பு); ' டி' அணியில், மதுமித்ரா (8ம் வகுப்பு) சுவிதா (9ம் வகுப்பு);'இ' அணியில் ரோஷன் (9ம் வகுப்பு) விணுஷா (9ம் வகுப்பு); 'எப்' அணியில், தர்ஷினி (8ம் வகுப்பு) ஷர்மிளா (9ம் வகுப்பு); 'ஜி' அணியில் ராதிகா (8ம் வகுப்பு) கனகேஷ்வரி (9ம் வகுப்பு); 'எச்' அணியில் திரிஷா (8ம் வகுப்பு) சஸ்மிதா (9ம் வகுப்பு) ஆகியோர் பங்கேற்றனர்.இதில், 'சி' அணியில், மதுராந்தி, அம்ரிதா ஆகியோர் தேர்வு பெற்றனர். நிகழ்ச்சியில், பள்ளி தாளாளர் சரோஜா, முதல்வர் யஷ்வந்த், ஆசிரியர்கள் தினேஷ்குமார், ஜெகநாதன், ஆசிரியைகள் கவுசல்யா, திவ்யா உட்பட பலர் பங்கேற்றனர்.சாந்தி விஜய் மேல்நிலைப்பள்ளிகுன்னுார் சாந்தி விஜய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த போட்டியில், 'ஏ' அணியில், சப்ரினா ஹரிணி, (12ம் வகுப்பு); 'பி' அணியில், ஜெனிதா (12ம் வகுப்பு); விஜயலட்சுமி (11ம் வகுப்பு ); 'சி' அணியில், குவிலா, (11ம் வகுப்பு), அபிநயா , (11ம் வகுப்பு); 'டி' அணியில்,தர்ஷினி, (10ம் வகுப்பு), தமிழினி, (10ம் வகுப்பு); 'இ' அணியில், ஸ்ரீஜா, (12ம் வகுப்பு), விசித்ரா (12ம் வகுப்பு); 'எப்' அணியில், கோபிகா (9ம் வகுப்பு), அல்மா (9ம் வகுப்பு); 'ஜி' அணியில், ரேணுகா (8ம் வகுப்பு), மோனிஷா , ( 7ம் வகுப்பு);'எச்' அணியில், சுவுந்தரியா (9ம் வகுப்பு), பவதாரிணி (10ம் வகுப்பு) ஆகியோர் பங்கேற்றனர். அதில், 'பி' அணி, ஜெனிதா, விஜயலட்சுமி ஆகியோர் அரையிறுதிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.இதில், பள்ளி தலைமை ஆசிரியை வைரமணி, ஆசிரியைகள் உஷாராணி, தங்கமணி, ஜெயந்தி, பிரியா சாய் லட்சுமி, நீனா, ஜெனத் பிரியா ஆகியோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X