பொது செய்தி

தமிழ்நாடு

மடிமனையில் கோலாகல விழா

Added : ஜன 11, 2020
Advertisement

கோத்தகிரி:நீலகிரியில் வாழும் படுக சமுதாய மக்களின் குலதெய்வமான ஹெத்தையம்மன் திருவிழா, கடந்த, 6ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.விழாவின் முதல் நிகழ்ச்சியாக, கேர்பெட்டா கிராமத்தில், பேரகணி ஹெத்தையம்மன் அழைப்பு நடந்தது. இதனை தொடர்ந்து, புதன்கிழமை பேரகணி மடிமனையிலும், நேற்றுகாத்துகுளி மடிமனையிலும் திருவிழா சிறப்பாக நடந்தது.இவ்விழாவில், பேரகணி மற்றும் பெத்தளா ஹெத்தையம்மன்கள் ஒருசேர அமர்ந்து, அருள்வாக்கு நிகழ்ச்சி நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலாசார உடையுடன் பங்கேற்று, காணிக்கை செலுத்தி அம்மனை வழிபட்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.விழாவின் ஒரு கட்டமாக, இன்று ஒன்னதலை மடி மனையில் திருவிழா நடக்கிறது. விழாவில் அருள்வாக்கு, காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சியை அடுத்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாவை ஒட்டி, பேரகணி, பெத்தளா, ஒன்னதலை, கூக்கல், சின்ன குன்னுார், எப்பநாடு மற்றும் பெப்பேன் ஆகிய கிராமங்களில், ஆடல் பாடலுடன், கேளிக்கை நிகழ்ச்சிகள் நடப்பதால், விழா கோலம் பூண்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X