பொது செய்தி

தமிழ்நாடு

சிறு விவசாயிகளுக்கு 'சாய் சஹ்யோக்' மொபைல் 'ஆப்': 31ம் தேதிக்குள் பதிவு செய்ய வாரிய செயல் இயக்குனர் அறிவுரை

Added : ஜன 11, 2020
Advertisement
 சிறு விவசாயிகளுக்கு 'சாய் சஹ்யோக்' மொபைல் 'ஆப்': 31ம் தேதிக்குள் பதிவு செய்ய வாரிய செயல் இயக்குனர் அறிவுரை

குன்னுார்:''வரும் 31ம் தேதிக்குள் அனைத்து சிறு தேயிலை விவசாயிகளும், 'சாய் சஹ்யோக்' என்ற மொபைல் 'ஆப்'பை பதிவிறக்கம் செய்து, பயன்படுத்துவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்,'' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.நீலகிரியில் உள்ள தேயிலை வாரியத்தில் பதிவு செய்துள்ள, சிறு தேயிலை விவசாயிகள் தங்கள் மொபைலில் 'சாய் சஹ்யோக்' செயலி பதிவுசெய்தல் மற்றும் சிறு தேயிலை விவசாயிகளுக்கு, விரைவு தகவல் குறியீடு உள்ள அடையாள அட்டை வழங்கும் சிறப்பு பயிற்சி உபாசி அரங்கில் நடந்தது.தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குனர் பாலாஜி தலைமை வகித்து பேசுகையில், ''இந்திய தேயிலை வாரியம், விவசாயிகளின் மேம்பாட்டிற்கு, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சிறு தேயிலை விவசாயிகள் தேயிலை வாரியத்தில் பதிவு செய்து, சிறு விவசாயிகளுக்கு முதற்கட்டமாக அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து சிறு தேயிலை விவசாயிகள் தங்களது மொபைல்களில் செயலியை பதிவிறக்கம் செய்து தேயிலை வாரியத்தின் அனைத்து பயன்களையும் தெரிந்து கொள்ளலாம். வரும் 31ம் தேதிக்குள் அனைத்து சிறு தேயிலை விவசாயிகளும், 'சாய் சஹ்யோக்' என்ற மொபைல் ஆப்'பை பதிவிறக்கம் செய்து, பயன்படுத்துவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்,'' என்றார்.தொடர்ந்து, வாரிய வளர்ச்சி அலுவலர் மீரா, விரைவு தகவல் குறியீடு மற்றும் சாய் சஹ்யோக் செயலி பதிவிறக்கம் செய்து செயல்படுத்துவது தொடர்பாக விளக்கம் அளித்தார்.'சுமோடோ குளோபல் டெக்னிக்' நிறுவனம் மூலம் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.மாவட்டத்திலிருந்து, 150க்கும் மேற்பட்ட தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் நிர்வாக இயக்குனர்கள் பங்கேற்றனர். இணை இயக்குனர் ஹரிபிரகாஷ் வரவேற்றார். உதவி இயக்குனர் பகலவன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X