தேவை கண்காணிப்பு குப்பையை பிரித்து வழங்குவதில் மெத்தனம் விழிப்புணர்வு இன்றி நோக்கமே கேள்விக்குறி | Dinamalar

தமிழ்நாடு

தேவை கண்காணிப்பு குப்பையை பிரித்து வழங்குவதில் மெத்தனம் விழிப்புணர்வு இன்றி நோக்கமே கேள்விக்குறி

Added : ஜன 11, 2020

ராஜபாளையம்:துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் சேகரிக்கப்படும் குப்பையை பிரித்து வழங்குவதில் பொது மக்களிடையே போதிய விழிப்புணர்வு இன்மையால்அரசின் நோக்கம் மற்றும் ஆர்வமுள்ளவர்களின் பணிகளும் வீணாகி வருகிறது.

மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப குடியிருப்பு பகுதிகளில் சேரும் குப்பை அதிக அளவில் சேர இவற்றை அப்புறப்படுத்த பணியாளர்கள் பற்றாக்குறையால் நாள்கணக்கில் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடுசுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.இப்பிரச்னைக்கு மாற் றாக மத்திய அரசின் சார்பில் அனைத்து பகுதிகளில் சேரும் குப்பையை அந்தந்த பகுதியிலே உரக்கூடங்கள் அமைத்து தரம் பிரித்து உரம் தயாரிக்கும் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்காக அந்தந்த பகுதி குடியிருப்பு நலச்சங்கங்கள், தன்னார்வு அமைப்புகள் மூலம்மக்கும், மக்கா குப்பைகள் தரம் பிரிப்பது குறித்தும் அதற்கான தனித்தனி நிறங்களில் கூடைகள் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இப்பணிகளுக்கு ஆதரவு வழங்க வேண்டிய பொதுமக்கள் போதிய ஒத்துழைப்பு இல்லாமல் அனைத்து வகை குப்பைகளையும் பிரிக்காமல் அப்படியே வழங்கி வருகின்றனர்.

இதனால் உரக்கூடங்களில்பிரிக்கும் பணிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. போதிய அறிவுறுத்தல் உடன் கடுமை காட்டிகண்காணிப்பை அதிகப்படுத்த வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

ஆரம்பத்தில் விறுவிறுப்பாக நடந்த பணி நாளடைவில் உத்வேகம் இன்றி குறைந்து விட்டது. இதனால் ஆர்வமுடன் வீட்டில் தரம் பிரித்து தரும் சிலரின் மனநிலையும் கேள்விக்குறி ஆகிறது.தேவையான அளவு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பள்ளி கல்லுாரி போன்ற நிலையில் இருந்து செயல்படுத்த வேண்டும். இவற்றின் முக்கியத்துவத்தை பொதுமக்களும் அறிய தொடர் விழிப்புணர்வு மேற்கொள்ள வேண்டும்.
- மணி, சமூக ஆர்வலர், ராஜபாளையம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X