பொது செய்தி

தமிழ்நாடு

சர்வீஸ் ரோடு கேட்டு கிராமத்தினர் மறியல்

Added : ஜன 11, 2020
Advertisement

காரியாபட்டி:காரியாபட்டி ஆவியூர் வழியாக மதுரை- தூத்துக்குடிக்கு நான்கு வழிச்சாலை அமைந்துள்ளது.

மதுரை, அருப்புக்கோட்டையில் இருந்து வரும் பஸ்கள் ஆவியூர் பஸ் ஸ்டாப்பில் நிறுத்தாமல் மெயின் ரோட்டில் நிறுத்துவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. நான்குவழிச் சாலையில் அதிவேகமாக வரும் வாகனங்களால் விபத்தும் நடந்துள்ளது. ரோட்டை கடக்க முயன்ற பயணிகள் பலர் விபத்தில் சிக்கி பலியான சம்பவங்கள் உண்டு.

இதையடுத்து பஸ் ஸ்டாப் அருகே வாகனங்கள் மெதுவாக செல்ல தடுப்பு ஏற்படுத்தினர். வாகனங்களை ஒதுக்குப்புறமாக நிறுத்தினாலும் தடுப்புகளால் இடையூறு இருந்து வந்தது. இந்நிலையில் சர்வீஸ் ரோடு கேட்டு அக்கிராமத்தினர் பல முறை கோரிக்கை விடுத்தனர். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நேற்று அப்பகுதியில் ரோடு பராமரிப்பு பணி நடந்தது. சர்வீஸ் ரோடு ஏற்படுத்தி கொடுத்தால் தான் பராமரிப்பு பணிகளை பார்க்க விடுவோம் என தெரிவித்து கிராமத்தினர் மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் யாரும் வராத நிலையில் தற்காலிக சர்வீஸ் ரோடு ஏற்படுத்தி தருவதாக ஒப்பந்தகாரர் உறுதியளித்ததையடுத்து கிராமத்தினர் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X