பொது செய்தி

தமிழ்நாடு

மறு சுழற்சி பொருட்களுக்கு பை:ராஜபாளையம் நகராட்சி புதுமை

Added : ஜன 11, 2020
Advertisement
 மறு சுழற்சி பொருட்களுக்கு பை:ராஜபாளையம் நகராட்சி புதுமை

ராஜபாளையம்:ராஜபாளையம் நகராட்சியில் புகையில்லா போகி கடைபிடிப்பதை முன்னிட்டு மறுசுழற்சி பொருட்கள் சேகரிப்பு முகாம் துவக்கப்பட்டுள்ளது.
நகராட்சி அலுவலகத்தில் ஒரு வாரம் செயல்பட உள்ள முகாமில் பொதுமக்களிடமிருந்து மறுசுழற்சி பொருட்களான பிளாஸ்டிக் பொருட்கள், காலணிகள், எலக்ட்ரானிக் கழிவுகள், காகிதங்கள் பெறப்பட்டு தனித்தனியாக டிரம்களில் சேகரிக்கப்பட்டது.

மறுசுழற்சி பொருட்களை கொண்டு வந்த மக்களை ஊக்குவிக்கும் விதமாக துணிப்பைகள் இலவசமாக வழங்கப்பட்டன. இதில் நகர் நல அலுவலர் சரோஜா, சுகாதார ஆய்வாளர்கள் பஙகேற்றனர்.இம்முகாம் நகராட்சி அலுவலகம் மற்றும் நகரில் உள்ள அனைத்து வார்டு அலுவலகங்களிலும் நேற்றிலிருந்து ஒரு வாரத்திற்கு செயல்படும் என நகராட்சி கமிஷனர் சுந்தராம்பாள் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X