பொது செய்தி

தமிழ்நாடு

சொன்னபடி பதவி வழங்கல உறுப்பினர்கள் ராஜினாமா மனு

Added : ஜன 11, 2020
Advertisement

விருதுநகர்:சொன்னபடி துணைத்தலைவர் பதவி வழங்காததால் வார்டு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக வலையன்குளம் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் விருதுநகர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

வத்திராயிருப்பு ஒன்றியம் வலையன்குளம் ஊராட்சி 3, 6வது வார்டு உறுப்பினர்கள் அளித்த மனுவில், 'ஊராட்சியில் வலையன்குளம், கோட்டைப்பட்டி என 2 கிராமங்கள் உள்ளன. ஊர்மக்கள் முன்னிலையில் கலந்தாலோசித்து ஊராட்சி தலைவர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

ஊராட்சி தலைவராக முத்துராம் தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவர் பதவிக்கு 3, 6 வது வார்டில் இருந்து ஒரு நபரை தேர்ந்தெடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் 3வது வார்டு உறுப்பினர் முனியாண்டி, 6வது வார்டு உறுப்பினர் பொன்ராம் ஆகியோருக்கு பேசிய படி பதவி வழங்கவில்லை. நாங்கள் இருவரும் பதவியை ராஜினாமா செய்கிறோம்," என குறிப்பிட்டுள்ளனர். இதையடுத்து சூலக்கரை போலீசார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருவரையும் பி.டி.ஓ.,வை பார்க்குமாறு அறிவுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X