ஈரானுக்கு எதிராக போர்:டிரம்ப்பை கட்டுப்படுத்தும் தீர்மானம் நிறைவேறியது

Updated : ஜன 11, 2020 | Added : ஜன 11, 2020 | கருத்துகள் (3)
Advertisement
ஈரானுக்கு எதிராக போர்:டிரம்ப்பை கட்டுப்படுத்தும் தீர்மானம் நிறைவேறியது

வாஷிங்டன்,:அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், மேற்காசிய நாடான ஈரான் மீது, போர் தொடுப்பதை கட்டுப்படுத்தும் தீர்மானம், அமெரிக்க பிரதிநிதிகள் சபையில், நிறைவேற்றப்பட்டது.
ஈரான் ராணுவத்தின், குத்ஸ் படைப்பிரிவின் தளபதி குவாசிம் சுலைமானி, கடந்த 3ல், ஈராக் விமான நிலையத்தில் வந்து இறங்கியபோது, அமெரிக்க படையின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் பலியானார். அவருடன் 10க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு பழிக்கு பழி வாங்குவோம் என, ஈரான் தெரிவித்துள்ளது.




இந்நிலையில், ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே உள்ள அமெரிக்க ராணுவத்தின் இரண்டு முகாம்கள் மீது, ஈரான் படையினர் நேற்று முன் தினம் தாக்குதல் நடத்தினர். இதில், 80 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டதாக ஈரான் தெரிவித்தது. இதன் காரணமாக, அமெரிக்கா - ஈரான் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டது.
இதையடுத்து, ஈரான் மீது, அமெரிக்க அதிபர் டிரம்ப் போர் தொடுப்பதை கட்டுப்படுத்தும் தீர்மானம், பிரதிநிதிகள் சபையில், ஜனநாயக கட்சியினரால் கொண்டுவரப்பட்டது.
இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக, 224 பேர் வாக்களித்ததை அடுத்து, தீர்மானம் நிறைவேறியது.

டிரம்ப்பின் குடியரசு கட்சியை சேர்ந்த மூன்று உறுப்பினர்கள், இத்தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.பிரதிநிதிகள் சபையில், ஜனநாயக கட்சியினருக்கு பெரும்பான்மை இருப்பதால், இத்தீர்மானம் எளிதில் நிறைவேறி உள்ளது. இதைத் தொடர்ந்து, இத்தீர்மானம், அமெரிக்க செனட் சபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அங்கு, டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு பெரும்பான்மை இருப்பதால், இத்தீர்மானம் தோல்வியடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்த டிரம்ப், ''சில நேரங்களில், நொடிப்பொழுதில் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். அப்போது, யாரிடமும் அனுமதி கேட்டுக் கொண்டு இருக்க முடியாது. தாக்குதல் நடத்துவதற்கு யாருடைய அனுமதியோ, ஆசிர்வாதமோ எனக்கு தேவையில்லை'' என்றார்.


இந்தியா வரும் அமெரிக்க அதிகாரி


அமெரிக்க அரசாங்கத்தை சேர்ந்த வெளியுறவுத்துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான பெண் அதிகாரி அலைஸ் ஜி.வெல்ஸ், வருகிற 13 மற்றும் 14ல் இலங்கை வருகிறார். பின் அங்கிருந்து இந்தியா வரும் அவர், இங்கு, 15 முதல் 18 வரை நடைபெறும் ரெய்சினா மாநாட்டில் பங்கேற்கிறார். அப்போது, இந்தியா - அமெரிக்கா இடையிலான சுமுக உறவு, இருநாட்டு விவகாரங்கள் குறித்து, விரிவாக விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது. பின்னர், இங்கிருந்து புறப்பட்டு, வரும் 19ல், பாகிஸ்தான் செல்கிறார்.


Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
12-ஜன-202004:22:32 IST Report Abuse
J.V. Iyer திரும்பவும் ட்ரம்ப் வெற்றிபெற உதவும் எளிமையான ஆயுதம் இந்த ஈரானுடன் போர். மும்பு புஷ் செய்திருக்கிறார். இவர் ஈரானுடன் போர் புரிவதற்கு பதிலாக, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளை ஒழிக்கலாம். அமெரிக்காவில் அமைதி ஏற்படும்.
Rate this:
Share this comment
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
11-ஜன-202020:38:56 IST Report Abuse
Vena Suna டிரம்ப் ஒரு வெறி பிடித்தவர். அவருக்கு இஸ்லாம் வகுப்பினத்தினரை பிடிப்பதில்லை. அவர் வெறுப்பை விட வேண்டும். போர் எப்போதும் தேவை இல்லாதது.
Rate this:
Share this comment
Cancel
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
11-ஜன-202009:23:13 IST Report Abuse
வல்வில் ஓரி அப்போ வான வேடிக்கை கிடையாதா? ஏமாத்தி போட்டானுவோலே 😢😢😢
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X