பொது செய்தி

தமிழ்நாடு

திருப்புத்துாரில் ஆருத்ரா தரிசனம்

Added : ஜன 11, 2020
Advertisement
 திருப்புத்துாரில் ஆருத்ரா தரிசனம்

திருப்புத்துார்:திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நேற்று நடராஜருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

இக்கோயிலில் நடராஜருக்கு தனி சன்னதி உண்டு. சுதையால் ஆன மூலவர் அருள்பாலிக்கிறார். நேற்று ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு அதிகாலை 4:30 மணிக்கு கோயிலில் திருப்பள்ளியெழுச்சிமுடிந்தபின் உற்ஸவர் சிவகாமி அம்மன் உடனாய நடராஜருக்கு 21 வகையான அபிேஷகங்கள் நடந்தன. பின்னர் உற்ஸவர் மாணிக்கவாசகர் பிரகார வலம் வந்து இறைவன் கவுரி தாண்டவமாடிய நடராஜர் சன்னதிக்கு எழுந்தருளினார்.

பின்னர் மூலவர் நடராஜருக்கு 21 பதிகங்கள் தேவாரம் பாடி தீபாராதனை நடந்தது.திருநாள் மண்டபத்தில் எழுந்தருளிய உற்ஸவருக்கு சிறப்பு அலங்காரம் நடந்து தீபாராதனை நடந்தது.தேவகோட்டை: தேவகோட்டையில் நித்யகல்யாணி கைலாசநாதர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு மாணிக்கவாசகருக்கு காப்பு கட்டப்பட்டு 10 நாட்கள் சிறப்பு பூஜை நடந்தது.

நேற்று நடராஜர், சிவகாமி அம்பாள், மற்றும் மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது.நகர மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் மாணிக்க வாசகருக்கு காப்பு கட்டப்பட்டு தினமும், மாணிக்கவாசகருக்கும், நடராஜருக்கும் சிறப்பு அபிேஷக பூஜைகள் நடந்தது. நேற்று அதிகாலை திருப்பனாந்தாள் பூஜை, கோபூஜை நடந்தன.தொடர்ந்து நடராஜர் சிவகாமி அம்மன், மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிேஷகங்கள் நடந்தன.ராம்நகர் ஆலமரத்து முனீஸ்வரர் கோவிலில் சிறப்பு ேஹாமம் நடந்தது. அதனை தொடர்ந்து முனீஸ்வரருக்கு சிறப்பு அபிேஷகங்கள் சிறப்பு பூஜைகள் நடந்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X