மடப்புரத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அரசுக்கு வருவாய் இழப்பு

Added : ஜன 11, 2020
Advertisement

திருப்புவனம்:மடப்புரத்தில் அரசு இடத்தை ஆக்கிரமித்து தனி நபர்கள் கடைகள் அமைத்துள்ளதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற காளி கோயில்களில் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலும் ஒன்று, இங்கு வாரம்தோறும் வெள்ளி, செவ்வாய், ஞாயிறுகளில் பெண்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.பக்தர்களை நம்பி கோயில் அருகில் உள்ள அரசு இடத்தை ஆக்கிரமித்து பலரும் கடைகள் அமைத்து பூஜை பொருட்களான தேங்காய், பழம், ஊதுபத்தி, சூடம், எலுமிச்சை மாலை உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

இடத்தை ஆக்கிரமித்து கடைகள் அமைத்துள்ளவர்களிடம் மாதம்தோறும் 2 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை வாடகை வசூல் செய்து தனிநபர்கள் சிலர் லாபம் ஈட்டி வருகின்றனர். அரசு இடத்தை ஆக்கிரமித்துள்ளதுடன் போக்குவரத்திற்கு இடையூறாகவும் விளம்பர பலகைகளை வைத்துள்ளனர்.மேலும் அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்களையும் ஆக்கிரமித்து கடைகள் அமைத்து பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.

இரவு நேரங்களில் முன்விரோதம் காரணமாக போட்டியாளர்கள் கடைகளை சேதப்படுத்துவது, தீவைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி அதில் அறநிலையத்துறையே சொந்தமாக கடைகள் கட்டி வாடகைக்கு விட்டால் அறநிலையத்துறைக்கு வருமானம் அதிகரிக்கும், பக்தர்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக மடப்புரத்தில் ஆக்கிரமிப்பை அகற்றி பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X