மதுரை-ராமேஸ்வரம் ரோட்டில் ஓட்டை பஸ்களால் பயணிகள் அவதி

Added : ஜன 11, 2020
Advertisement

மானாமதுரை:மதுரை-ராமேஸ்வரம் ரோட்டில் மானாமதுரை வழியாக செல்லும் பெரும்பாலான அரசு பஸ்கள் ஓட்டை,உடைசலாக நடுவழியில் நிற்பதினால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மானாமதுரை வழியாக ராமேஸ்வரத்திற்கும்,மதுரைக்கும் தினந்தோறும் 300 க்கும் மேற்பட்ட அரசு பஸ்களும்,தனியார் பஸ்களும்,சென்று வருகின்றன.இந்நிலையில் மானாமதுரை பகுதியிலிருந்து மதுரைக்கு தினந்தோறும்ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு பணிகளுக்காக சென்று வருகின்றனர்.

இந்நிலையில் மதுரை எம்.ஜி.ஆர்.,பஸ் ஸ்டாண்டிலிருந்து மானாமதுரைக்கு செல்லும் பயணிகளை பரமக்குடி, ராமநாதபுரம், ராமேஸ்வரம் செல்லும் பஸ்கள் முதலில் ஏற்றாமல் பஸ்ஸில் உள்ளஇருக்கைகள் அனைத்தும் நிரம்பிய பிறகே மானாமதுரை பயணிகளை நின்று கொண்டு செல்லுமாறு ஏற்றிவருகின்றனர்.

இந்நிலையில் கமுதி,முதுகுளத்துார் டெப்போக்களைச் சேர்ந்த பஸ்களில் மட்டும் மானாமதுரை பயணிகளை முன்னரே இருக்கைகளில் அமர வைக்கின்றனர்.இந்த டெப்போக்களைச் சேர்ந்த பெரும்பாலான பஸ்கள் ஓட்டை.உடைசலாகவும்,மழை பெய்தால் பயணிகள் உள்ளே உட்கார முடியாத அளவிற்கு மழை நீர் பஸ்சுக்குள் வருவதும் வாடிக்கையாக உள்ளது.

மேலும் டயர்களும் வழுக்கையாக உள்ளதால் ஏதாவது ஒரு பஸ் தினந்தோறும் நடுவழியில் நின்று விடுகிறது.இது குறித்து அரசு பஸ் டிரைவர் ஒருவரிடம் கேட்ட போது, பஸ்களில் உள்ள பழுதை சரிசெய்யக்கோரி அதிகாரிகளிடம் கூறியுள்ளோம்,மேலும் இந்த வழியில் ஒரு டெப்போவைச் சேர்ந்த பஸ்களில் 4 பஸ்களுக்கு ஒரு பஸ்சில் தான் மாற்று டயர் உள்ளது.ஆகவே அந்த பஸ் வரும் வரை காத்திருக்க வேண்டியுள்ளது,ஆகவே அனைத்து பஸ்களிலும் அதிகாரிகள் மாற்று டயர்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X