பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சியில் இன்று மறைமுக தேர்தல் தலைவர், துணை தலைவர் பதவிக்கு மோதல்

Updated : ஜன 11, 2020 | Added : ஜன 11, 2020
Advertisement

சிவகங்கை: ஊரக உள்ளாட்சி தேர்தலில் தலைவர், துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடத்த மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

மாவட்டத்தில் 16 மாவட்ட கவுன்சிலர், 161 ஒன்றிய கவுன்சிலர், 445 கிராம ஊராட்சி தலைவர், 3 ஆயிரத்து 126 ஊராட்சி வார்டு கவுன்சிலர்களுக்கான இரு கட்ட தேர்தல் முடிந்து வெற்றி பெற்றுள்ளனர். மாவட்ட கவுன்சிலர் 16 வார்டில் 8 இடத்தை அ.தி.மு.க., கூட்டணி, 8 இடத்தை தி.மு.க., கூட்டணி வென்றுள்ளது.


அ.தி.மு.க.,- தி.மு.க., இடையே போட்டி


இங்கு மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் தலைவர், துணை தலைவர் பதவியை கைப்பற்ற அ.தி.மு.க., - தி.மு.க., இடையே கடும் போட்டி நிலவுகிறது. அதே போன்று கண்ணங்குடி ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவியை அ.ம.மு.க.,கைப்பற்றுகிறது. மற்ற ஊராட்சி ஒன்றிய தலைவர், துணை தலைவர் பதவிகளை கைப்பற்றுவதில் கட்சிகளிடையே கடும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.ஆள்கடத்தல், குதிரை பேரம் வரை சென்றுள்ளனர்.


பலத்த போலீஸ் பாதுகாப்பு:

சிவகங்கையில் மாவட்ட ஊராட்சி கவுன்சில் தலைவர், துணை தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிகழ்ந்தால், இரு கட்சிகளின் தலைவர், துணை தலைவர் வேட்பாளர் பெயர்களை எழுதி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவர். கிராம ஊராட்சி துணை தலைவர் தேர்தலும் அந்தந்த கிராம ஊராட்சியில் நடத்தப்படும்.

மறைமுக தேர்தல் காலை 11:00 மணிக்கு தலைவர் பதவிக்கும், மாலை 3:00 மணிக்கு துணை தலைவர் பதவிக்கும் நடத்தப்படும். இத்தேர்தலில் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க, மறைமுக தேர்தல் நடக்கும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போட முடிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X