பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளை கவரும்

Added : ஜன 11, 2020
Advertisement

திருப்புவனம்:திருப்பாச்சேத்தியில் விவசாயி ஒருவர் தனது புதிய வீட்டிற்கு விவசாயி இல்லம் என பெயர் சூட்டியிருப்பது வரவேற்பை பெற்றுள்ளது.

உலகம் முழுவதும் விவசாயம் அதிலும் இயற்கை விவசாயத்திற்கு ஆதரவு பெருகி வரும் வேளையில் உண்மையாகவே விவசாயிகளை ஆதரிக்கும் வண்ணம் செயல்பட்டு வருகிறார் திருப்பாச்சேத்தியை சேர்ந்த விவசாயி முருகன், அரசு ஊழியராக பணியாற்றி ஒய்வு பெற்ற இவர் விவசாயி என சொல்வதையே விரும்புகின்றார். தந்தையும் விவசாயி என்பதால் பெரும்பாலான நேரங்களில் விவசாயத்தில் புதுமைகளை புகுத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

தென்னை, வாழை, கரும்பு, நெல் உள்ளிட்டவற்றை சாகுபடி செய்து வருகிறார்.சொந்த நிலத்தில் பயிரிட்ட அரிசியையே பயன்படுத்தி வரும் இவர் வீட்டின் முகப்பு பகுதியில் விவசாயி இல்லம் என பெரிய அளவில் எழுதி வைத்துள்ளார்.

முருகன் கூறியதாவது: முழு நேர விவசாய குடும்பத்தில் பிறந்த நான் விவசாயி இல்லம் என பெயர் வைத்ததில் வியப்பில்லை . மற்றவர்களுக்குதான் இது ஆச்சர்யம், புதிய வீடு கட்டி முடித்தவுடன் பலரும் தந்தை பெயர், தாயின் பெயரை பரிந்துரை செய்தனர். ஆனால் சிறுவயது முதலே விவசாயத்தின் மீது இருந்த ஆர்வம் காரணமாக 'விவசாயி இல்லம்' என வைத்துள்ளேன்,

இந்த பகுதி வழியாக செல்லும் பலரும் வீடு தேடி வந்து வாழ்த்துவது வழக்கம், ஓய்வு நேரங்களிலும் , வார விடுமுறை நாட்களிலும் விவசாயம் செய்து வந்த நான் ஓய்வு பெற்று விட்டதால் முழு நேர விவசாயியாக மாறிவிட்டேன், தினசரி வயல்களை, தென்னந்தோப்புகளை பார்க்காமல் துாக்கம் வராது, விவசாயம் செய்வதற்காகவே வெளியூர் செல்வது கூட கிடையாது., என்றார்.
இவரை வாழ்த்த 94863 25979

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X