பொது செய்தி

தமிழ்நாடு

ஏற்றம் இறைத்த விவசாயிகளுக்கு

Added : ஜன 11, 2020
Advertisement

சிவகங்கைசங்கம் அமைத்து வளர்ந்த தமிழும், சங்கமித்து வாழும் தமிழர்களும் அனுபவபூர்வமாக உணர்ந்ததும், உணர்த்துவதும் ஒன்று தான், அது தான் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பது.

இதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்ட விவசாயிகள் ஆயிரம் பேர் சங்கம் அமைத்து, அதன் மூலம் ஏற்றுமதி துறையில் காலடி எடுத்து வைத்துள்ளனர். இம்மாவட்டத்தில் சிங்கம்புணரி, திருப்புத்துார் பகுதிகளில் வறட்சியை தாங்கி வளரும் தென்னை மரங்களும், வறுமையை தாங்கி வாழும் விவசாயிகளும் அதிகம்.மத்திய அரசு திட்டத்தின் கீழ் ஒன்று சேர்ந்த இப்பகுதி தென்னை விவசாயிகள் ஆயிரம் பேர் சிவகங்கை தென்னை உற்பத்தியாளர் கம்பெனி என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை துவக்கி விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதற்கட்டமாக முழு மானியத்தில் கிடைத்த மூன்று மரச்செக்குகளை கொண்டு கடலை எண்ணெய், நல்லெண்ணெய்,, தேங்காய் எண்ணெய்யை உற்பத்தி செய்து விற்றனர். முதல் தர மூலப்பொருட்களை கொண்டு, ரசாயன கலப்பின்றி உற்பத்தி செய்த எண்ணெய்யை தங்களுக்குள்ளாகவே விற்றுக்கொண்டனர்.

தேவைக்கு போக மீதியை, தேடி வரும் வாடிக்கையாளர்களுக்கும் விற்றனர். அவர்களில் சிலர் இந்த எண்ணெய் தரத்தை அறிந்து சில வெளிநாட்டு இறக்குமதியாளர்களுக்கு தகவல் சொல்ல, இப்போது இந்த விவசாயிகளின் காட்டில் ஒரே மழை தான். ஏற்றம் இறைத்து விவசாயம் செய்து, விலை கிடைக்காமல் ஏங்கியவர்கள் இன்று விளைபொருட்களை மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி ஏற்றுமதி செய்யும் அளவிற்கு ஏற்றம் பெற்றுள்ளார்கள்.

மாதத்துக்கு ஆயிரம் லிட்டர் எண்ணெய் உற்பத்தி செய்தவர்கள் தற்போது, ஒரு நாளைக்கு ஆயிரம் லிட்டர் உற்பத்தி என்ற இலக்கிற்கு உந்தப்பட்டு விட்டனர். கரு.சேவுகப்பெருமாள் சேர்மன்: இத்திட்டம் குஜராத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதால்,

மோடி பிரதமர் ஆன பிறகு, நாடு முழுவதும் அமல்படுத்தினார். இம்மாவட்டத்தில் கடின உழைப்புக்கு பிறகு நிறுவனத்தை கட்டமைத்து தற்போது வெற்றியின் முதல் துளியை சுவைக்கிறோம். இங்கு நாங்களே மூலப்பொருட்களை போட்டு எண்ணெய் தயாரித்து கொடுக்கிறோம், வாடிக்கையாளர்கள் கொண்டுவரும் மூலப்பொருட்களை கொண்டும் கூலி அடிப்படையில் எண்ணெய்யாக ஆட்டி கொடுக்கிறோம். ஒற்றுமை, உழைப்பு, தரம் இதுவே எங்களின் தாரக மந்திரம். இனி விவசாயம் மட்டுமல்ல, விவசாயிகளும் பிழைத்துக்கொள்வோம், என்றார். இவர்களை வாழ்த்த: 98421 27522.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X