போக்குவரத்து ஸ்தம்பிப்பு

Added : ஜன 11, 2020
Advertisement

பொள்ளாச்சி 'சிக்னல்'களில், ஞாயிற்றுக்கிழமைகளில் போலீசார் பணியில் இல்லாததால், வாகனங்கள் தாறுமாறாக இயக்கப்பட்டு போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது.எஸ்.திருமுருகன், பொள்ளாச்சி.கடும் துர்நாற்றம்பொள்ளாச்சி, சமத்துார் பேரூராட்சி பகுதிகளில், சாக்கடை கால்வாய்கள் முறையாக துார்வாரப்படாமல் உள்ளதால், கடும் துர்நாற்றம் ஏற்பட்டு, சுகாதாரம் பாதிக்கிறது.ஆர்.கார்த்தி, சமத்துார்.சுகாதாரம் பாதிப்புஆனைமலை, சின்னப்பம்பாளையம் சுற்றுப்பகுதிகளில், ஆங்காங்கே குப்பை தேங்கி கிடப்பதால் சுகாதாரம் பாதிக்கிறது. குப்பையை சுத்தப்படுத்த வேண்டும்.கே.வேலுச்சாமி, ஆனைமலை.நோய் பரவும் அபாயம்வால்பாறை நகரில் திறந்தவெளிக் குப்பைக்கிடங்கில் கொட்டப்படும் குப்பைகளால், அரசு கல்லுாரியில் மாணவர்கள் துர்நாற்றம் தாங்க முடியாமல் தவிக்கின்றனர்.விஜய், வால்பாறை.விபத்து அபாயம்உடுமலை, பாலப்பம்பட்டி ரோட்டில், குழாய் பதிக்க தோண்டப்பட்ட குழிகள் அருகில் எச்சரிக்கை பலகை இல்லாததால், இரவு நேரத்தில் விபத்துகள் ஏற்படுகிறது.எம்.வினோத், உடுமலை.ரோடெல்லாம் பள்ளம்உடுமலை, பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே, ரோடு குண்டும் குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.வி.குணசேகர், உடுமலை.தெருநாய் தொல்லைஉடுமலை, எஸ்.வி.,புரம், குடியிருப்பு பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரிப்பதால், அப்பகுதி மக்கள் அச்சத்துக்குள்ளாகின்றனர்.எம்.பாலாமணி, உடுமலை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X