பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர் சிறப்பு முகாம்: விழிப்புணர்வு ஊர்வலம்

Added : ஜன 11, 2020
Advertisement

உடுமலை:வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கொமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர்.இந்திய தேர்தல் ஆணையம் சார்பில், வாக்காளர் பட்டியலில், வாக்காளர் சேர்ப்பு, திருத்தம் ஆகியவற்றுக்காக, வரும் 22ம் தேதி வரை, சிறப்பு முகாம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கொமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இந்த சிறப்பு முகாம் நடந்து வருகிறது. முகாம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த, பள்ளி, மாணவ, மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. தலைமையாசிரியர் மாரியப்பன், உதவி தலைமையாசிரியர் அலமேலுமங்கை துவக்கி வைத்தனர். கிராம முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம், கொமரலிங்கம் பஸ் ஸ்டாப்பில் நிறைவு பெற்றது. ஊர்வலத்தில், சிறப்பு முகாம் குறித்த வாசகங்களை உள்ளடக்கிய பதாகைகளை மாணவர்கள் ஏந்திச்சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X