பொது செய்தி

தமிழ்நாடு

பொள்ளாச்சி மாவட்டம் இ.மு., தீர்மானம்

Added : ஜன 11, 2020
Advertisement

பொள்ளாச்சி:'பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு, மாவட்டம் அறிவிக்க வேண்டும்,' என, இந்துமுன்னணி தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு வலியுறுத்தியுள்ளது.பொள்ளாச்சியில், கோவை தெற்கு மாவட்ட இந்து முன்னணி பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது. மாநில செயலாளர் அண்ணாதுரை பேசினார்.நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:கோவை மாவட்டத்தை பிரித்து பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும் என இந்து முன்னணி நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது.பொள்ளாச்சி தலைமையாக கொண்டு, உடுமலை, மடத்துக்குளம் பகுதியையும் சேர்த்து புதிய மாவட்டம் அறிவிக்க வேண்டும்.வரும், 12ம் தேதி விவேகானந்தர் ஜெயந்தியை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்டம் முழுவதும் இளைஞர் எழுச்சி விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை வரவேற்று, அந்த சட்டத்தை பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த, மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் துண்டுப்பிரசுரம் வினியோகம் செய்யப்படும்.மக்களிடம் பொய்யான பிரசாரத்தை செய்து கொண்டுள்ள அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொங்கல் விழாவையொட்டி, பாரதமாதா வழிபாடு கிராமங்கள் தோறும் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாவட்ட தலைவர் ரவி, மாவட்ட பொதுச் செயலாளர் கார்த்திக்கேயன், மாவட்ட பொருளாளர் அசோக்குமார் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X